மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு நன்றாக படிக்க மன்றாடிய தலைமை ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2025

மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு நன்றாக படிக்க மன்றாடிய தலைமை ஆசிரியர்

 

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். என்றாலும் இவர்களில் பலர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை, சரிவர படிப்பதில்லை என கூறப்படுகிறது.


2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாணவ, மாணவியரையும் வழக்கம்போல் பள்ளி மேடைக்கு முன் தலைமை ஆசிரியர் ரமணா வரச்சொன்னார். பிறகு மாணவர்கள் முன் தரையில் விழுந்து வணங்கியதுடன் 50 தோப்புக்கரணமும் போட்டார். பிறகு, "இனியாவது உங்களுக்காக நீங்கள் படியுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்" என வருத்தத்துடன் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டார்.

1 comment:

  1. இந்த செய்தி ஆசிரியர்களுக்கு உணர்த்த வரும் செய்தி அனைவரும் இதையே பின்பற்ற கூறுகிறதா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி