அரசு ஊழியர்கள் போராட்டம் ஜுனுக்கு தள்ளி போட முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2025

அரசு ஊழியர்கள் போராட்டம் ஜுனுக்கு தள்ளி போட முடிவு


தேர்வு நேரம் என்பதால், அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிட்டு உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமீபத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அடுத்தக்கட்ட போராட்டத்தை, இம்மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர். சட்டசபை கூட்டம் முடியும் வரை போராட்டத்தை தள்ளிப்போட வேண்டும் என, அவர்களிடம் அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், போராட்டம் தொடர்பாக புதிய முடிவை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:
தேர்வு நேரம் என்பதால் போராட்டத்தை, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், பிரச்னையை ஆறப் போடவில்லை. பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழு நான்கு வாரம் அவகாசம் கேட்டுள்ளது. அதன்பின், அவர்களை மீண்டும் சந்தித்து பேசுவோம்.

என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிந்து, அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும். தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்தினால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


4 comments:

  1. அமைச்சர்களின் கோரிக்கை இந்த சந்திப்பில் நிறைவேறியிருக்கிறது . ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிராகரித்த அமைச்சர்களுக்கான சந்திப்பு அது. இனி பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராட்டம் நடத்த வேண்டாமென அமைச்சர்கள் கோரிக்கை வைக்கலாம். ஜாக்டோ ஜியோ பெருந்தன்மையாக ஏற்க தயாராக இருக்காங்க

    ReplyDelete
  2. எல்லாம் பெட்டி

    ReplyDelete
  3. நீங்களும் உங்க சங்கமும்

    ReplyDelete
  4. ஐ ஏமாந்திகளா? வாங்க ஏமாத்தி ஏமாத்தி விளையாடலாம். நாங்க ஏமாத்துவோம் நீ ஏமாரனனும் இது தான் மறுபடியும் விளையாடுவோம் . ஜூன் மாதம் வாங்க விளையாடுவோம். இது தான் இவர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி