ஆசிரியர் நியமன தேர்வு முடிவில் குளறுபடி; மாணவ பருவத்தில் தேர்வெழுதினரா என கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2025

ஆசிரியர் நியமன தேர்வு முடிவில் குளறுபடி; மாணவ பருவத்தில் தேர்வெழுதினரா என கேள்வி

 

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு நடந்த நியமன தேர்வில், வயது அடிப்படையில், மாணவ பருவத்தில் இருக்கும் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.


தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு லட்சம் பேர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.


அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்த போதும், 12 ஆண்டுகளாக நியமனங்கள் நடக்கவில்லை. இந்நிலையில், 2024 ஜூலையில், 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நியமன தேர்வு என்ற பெயரில் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.


இந்த தேர்வை, 25,000க்கும் மேற்பட்டோர் எழுதினர். இதன் முடிவு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் பலர், 2005, 2006ல் பிறந்தவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, 2024ல் இவர்கள் நியமன தேர்வு எழுதிய போது 17, 18 வயது தான் இருக்கும். அந்த வயதில் எவ்வாறு ஆசிரியர் பட்டய தேர்வு முடித்து, நியமன தேர்வை எழுத முடியும் என்ற, புதிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.


கவனக்குறைவு


இதுகுறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: நியமன தேர்வை, பிளஸ் 2 முடித்து, அதன் பின் ஈராண்டுகள் ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்து, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் தான் எழுத தகுதியானவர்கள். இதன்படி, 17 வயதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர், 19 வயதில் ஆசிரியர் பட்டியப்படிப்பு முடிக்க முடியும். 2022ல் தான் கடைசியாக, டி.இ.டி., தேர்வு நடந்தது.


இதன்படி, 2005ல் பிறந்தவர்களுக்கு, 2022ல் 17 வயதாகும். அப்போது, அவர்கள் பிளஸ் 2 முடித்திருக்க முடியும். ஆனால், எவ்வாறு டி.இ.டி., தேர்ச்சி பெற்று, நியமன தேர்வை எழுதியிருக்க முடியும்.


தேர்ச்சி முடிவு பட்டியலில் வயதை தவறாக குறிப்பிட்டிருக்கலாம் என்றாலும், 12 ஆண்டு களுக்கு பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்திய தேர்வில், டி.ஆர்.பி., அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பின்றி இருக்கலாமா? கவனக்குறைவு என்றாலும் இதுவரை டி.ஆர்.பி., ஏன் விளக்கம் அளிக்கவில்லை.


டி.இ.டி., தேர்ச்சி பெற்று, பல ஆண்டுகள் காத்திருந்து இந்த நியமன தேர்வை எழுதினோம். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி காலியாக உள்ள பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுத்தால், தற்போது தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைத்திருக்கும்.


முதல்வர் ஸ்டாலின், 'கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்' என்று கூறுகிறார். ஆனால், அவரது ஒரு கண்ணான - கல்வியில் தொடரும் பிரச்னையை எப்போது தான் சரிசெய்வார் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

5 comments:

  1. எல்லாம் பெட்டி

    ReplyDelete
  2. I think candidate entering Date of birth wrongly in Online Application.

    ReplyDelete
  3. They must be a 10th result date entered instead of D.O.B
    Here the data for the above fact.
    http://www.collegesintamilnadu.com/results/2005/SSLC-X-Results-Tamil-Nadu





    http://www.collegesintamilnadu.com/results/2006/SSLC-X-Results-Tamil-Nadu

    ReplyDelete
  4. தவறான செய்தி 19 வயதில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்திருந்தால் TET எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் நியமனத் தேர்வில் எழுதுவதற்கு தகுதி பெற்றவராவார். 2002, 2003ல் பிறந்தவர்களுக்கு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம், பொய்யான செய்தியை பரப்பாதீர். தவறு இருந்தால் எடுத்து காட்டவும் , வெறும் சந்தேகத்தை தொடர்ச்சியாக கூறி உண்மைையை மாற்ற முடியாது

    ReplyDelete
  5. கடைசியாக TET நடந்த ஆண்டு 2022, அன்று அவர் 19 வயதுடையவராக இருந்தால் அவர் பிறந்த ஆண்டு 2003 ஆக இருக்க வேண்டும். சில விஷமிகள் தவறான செய்திையை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி