தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதை செயல்படுத்தும் விதமாக, பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். அவற்றை தொகுத்து இயக்குநரகத்துக்கு 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படாத வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி