என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு: அரியர் மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2025

என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு: அரியர் மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகள், அடுத்த மாதம் (ஜூன்) தொடங்க இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், படித்து பல்கலைக்கழக வரன்முறையில் அனுமதிக்கப்பட்டுள்ள படிப்புக்கான உச்ச காலத்தை கடந்தும் பல்வேறு மாணவர்கள் அரியர் வைத்திருக்கிறார்கள்.


அந்த வகையான மாணவர்கள், பயன்பெறும் வகையில் வருகிற ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வில் அவர்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது கடைசி வாய்ப்பு என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.


இந்த சிறப்பு தேர்வானது, சென்னை, விழுப்புரம், ஆரணி, ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மையங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள், https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் வருகிற 17-ந்தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், சிறப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஹால்டிக்கெட் ஆகியவை குறித்த விவரங்கள் வருகிற 27-ந்தேதிக்கு பிறகு தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும். அதனால், தேர்வர்கள், https://aucoe.annauniv.eduஎன்ற இணையதளத்தை தொடர்ந்து கவனிக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி