தொடக்க கல்வி பட்டயத்தேர்வு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் நடத்தப்படுகிறது. அந்தவகையில் முதலாம் ஆண்டு தேர்வுகள் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு, விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவிட்டு, தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் எந்த வித பணி நியமனங்களையும் செய்யாமல் தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர். இதுவரை திமுக ஆட்சியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் செய்ய வில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி அளித்தார். இன்னும் நிறைவேற வில்லை. பள்ளிக்கல்வி எதை நோக்கி செல்கிறது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
ReplyDelete