இலவச பேருந்து பயண அட்டை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் - 2025 - 26 ம் கல்வியாண்டில் 1 முதல் 12 ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது - சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பொருட்டு EMIS தொழில்நுட்ப குழுவால் பேருந்து பயண அட்டை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்காக , EMIS- App இல் பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணாக்கர்களின் விவரங்களை ( Not Willingness ) ( / X ) EMIS- App இல் உடனடியாக பதிவிடும்படி தெரிவித்து இப்பணியினை உடனடியாக விரைந்து முடிக்கும்படி அனைத்து தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
DSE - Bus Pass Proceedings - Download here
ஜூன் மாதம் தொடக்கத்தில் ( பள்ளி திறக்கும் நாளில்) இருந்த இந்த இலவச பஸ் பாஸ் கிடைத்தால் நன்றாக இருக்கும். White board bus மட்டுமில்லாமல் அனைத்து bus களிலும் இலவசம் என்று இருந்தால் white board bus ல் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். நன்றி
ReplyDelete