10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? - உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2025

10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? - உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல்

 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல். தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.


பிறந்த தேதியை திருத்துவதற்கு மேற்கண்ட ஆவணங்களுடன் பிறப்பு சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பள்ளி சேர்க்கை நீக்க பதிவேடு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.


திருத்தம் கோரும் விண்ணப்பத்துடன் இந்த ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அதை இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய விண்ணப்பங்களை தங்கள் அலுவலக அளவிலேயே நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


இந்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி