எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 73,000 பேர் விண்ணப்பம்: தரவரிசை பட்டியல் சில தினங்களில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2025

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 73,000 பேர் விண்ணப்பம்: தரவரிசை பட்டியல் சில தினங்களில் வெளியீடு

 

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 72,943 மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். இது கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதி​க​மாகும். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி​களில் 9,200 எம்​பிபிஎஸ் இடங்​கள் இருக்​கின்​றன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்​கீட்​டின் கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு வழங்​கப்​படு​கிறது.


அதே​போல், 3 அரசு பல் மருத்​து​வக்கல்​லூரி​களில் உள்ள 250 பிடிஎஸ் இடங்​களில் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 15 சதவீத இடங்​கள் போக, மீத​முள்ள 85 சதவீத இடங்​கள் மாநில அரசுக்கு உள்​ளன. தனி​யார் கல்​லூரி​களில் அரசு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்கு 1,900 இடங்​கள் உள்​ளன. அதில், 126 இடங்​கள் அரசு பள்ளி மாணவர்​களுக்கு ஒதுக்​கப்​படு​கிறது.


இந்​நிலை​யில், 2025-26-ம் கல்​வி​யாண்டு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்​வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது ஜூன் 25-ம் தேதி​யுடன் நிறை வடைந்​தது. நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி​கள் ஆர்​வ​மாக விண்​ணப்​பித்​தனர். நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்கு 30 ஆயிரத்​துக்கு மேற்​பட்​டோரும், அரசு ஒதுக்​கீட்​டுக்கு 42 ஆயிரத்​துக்கு மேற்​பட்​டோரும் விண்​ணப்​பித்​துள்​ளனர்.


மொத்​தம் 72,943 விண்​ணப்​பங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இது கடந்த ஆண்​டை​விட 65 சதவீதம் கூடு​தல் எனவும் மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் அதி​காரி​கள் கூறியுள்​ளனர். மேலும், விண்​ணப்​ப​தா​ரர்​களின் நீட் மதிப்​பெண்​களை மத்​திய அரசிட​மிருந்து பெற்று அதன் அடிப்​படை​யில், சில தினங்​களில் தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடப்பட உள்​ள​தாக​வும் தெரி​வித்​தனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி