அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2025

அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 

அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


மதிப்பிற்குரிய இணை இயக்குநர் அவர்களது அறிவுரைகளின்படி


📌💯  நாளை முதல் அனைத்துப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். திறன் மாணவர்கள் தனியாகப் பிரித்து அமரவைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும்.


📝முன்னரே மாநிலத்திலிருந்து பெறப்பட்ட Thiran Joint Proceedings அனைத்துப் பள்ளிகளிலும் print out எடுத்து வைத்திருத்தல் வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ் ஆங்கில கணித வகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் 90 நிமிடங்கள் வீதம் தினசரி 30 நாட்களுக்கு திறன் மாணவர்களைப் பிரித்துவைத்து தனிவகுப்பில் நடத்துதல் வேண்டும்.


📝 tnexam websiteல் தற்போது 6,7,8, வகுப்புகளுக்கான தமிழ் ஆங்கில கணித ஆசிரியர் கையேடுகள் தரவிறக்கம் செய்யத் தயார் நிலையில் உள்ளன.


🌺 6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளில் திறன் TAGGING ( yes/ no)  ற்கு உட்படுத்தப்பட்டு baseline assessment முடித்த பின்னர் அம் மாணவ மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதத்திற்கான மதிப்பெண்களை EMIS ல் உள்ளீடு செய்த பிறகு 80 சதவீதத்திற்கு மேல் வரும் மாணவ மாணவிகள் திறன் இயக்கத்தினுள் வரவழைக்கப்பட மாட்டார்கள். 6 முதல் 9 வரை என்பது 80 சதவீதத்திற்கும் கீழ் உள்ள மாணவ மாணவிகள் திறன் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.( ஆகஸ்ட் மாதம் வரை  BASIC L.O - திறன் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 30 நாட்கள் பயிற்சி - தினமும்- தமிழ் 90 நிமிடம் ஆங்கிலம் 90 நிமிடம் கணிதம் 90 நிமிடம். இதற்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர் ஒதுக்கீடு தலைமையாசிரியர் தலைமையில் தயார் செய்திருக்க வேண்டும்


📝 திறன் வகுப்புகளுக்கான பாட அட்டவணை பள்ளியில் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.


📝 நடுநிலை மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளின் அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் திறன் குறித்து அறிந்திருத்தல் வேண்டும்.


🌺 வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட  அல்லது exams site மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட THIRAN Teacher hand book ( THB)  - soft copy இன்று 30 நாள் திறன் பயிற்சி எடுக்கக்கூடிய தமிழ் ஆங்கிலம் கணித ஆசிரியர்களுக்கு குறைந்தது 5 பக்கங்களை  print out எடுத்து தரப்பட வேண்டும். இன்று முதல் THB ல் உள்ள BASIC L.O ற்கான பாடப்பொருளின் படி வகுப்பறை செயல்பாடு இருக்க வேண்டும்.


🌺  ஒரு பாடத் தலைப்பு முடிந்த பின்னர் அதற்கான பயிற்சித்தாள் செய்வதையும் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.WORK BOOK hard copy கிடைக்கும் வரை ஆசிரியர் கரும்பலகையில் ( or Smart TV or Smart class)எழுதி மாணவர்களை நோட்டில் எழுத வைக்கலாம்.


🌺 வார வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்த வாரத்தில் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 10  மதிப்பெண்களுக்கு ( தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும்) paper test வைக்கப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.( mark entry , corrected papers)


📝 , திறன் சார்ந்த செயல்பாடுகள் சரிவர இருப்பதை அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் உறுதிசெய்துகொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.


🌺   வரும் நான்கு  நாட்களுக்குள் ஆசிரியர் கையேடு ( THB) மற்றும் மாணவர் பயிற்சி ஏடு ( WB) இரண்டும் பள்ளிகளுக்கு கிடைக்க பெற்றுவிடும்


🌺  குறிப்பு - emis school login ல் கீழ்க்கண்டவாறு THIRAN 30 நாள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய மாணவ மாணவிகளின் விவரங்களை CLASS WISE,SECTION WISE - print out எடுத்து வைத்துக்கொள்ளலாம்


*Emis School login


*Thiran assessment


*Exam mark entry


*Filter by assessment name- select ALL


*filter by status- unselect all


*Click on - view &update ( in any 1 class) Right corner download option available

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி