டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: ஆன்லைனில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் - பள்ளிக்கல்வி துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2025

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: ஆன்லைனில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் - பள்ளிக்கல்வி துறை

 டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழக அரசால் வழங்​கப்​படும் டாக்​டர் ராதாகிருஷ்ணன் நல்​லாசிரியர் விருதுக்கு அனைத்து வகை பள்​ளி​களை​யும் சேர்ந்த ஆசிரியர்​கள் ‘எமிஸ்’ இணை​யதளம் வாயி​லாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கு​மாறு அறிவிக்​கப்​பட்​டது.


இந்த ஆன்​லைன் விண்​ணப்​பத்​தில் ஏதேனும் தவறு​தலாக உள்​ளீடு செய்து சமர்ப்​பித்​து​விட்​டால் அதை சரிசெய்​யும் வகை​யில் திருத்​தம் மேற்​கொள்ள ஜூலை 29-ம் தேதி முதல் வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த வாய்ப்பை பயன்​படுத்தி ஆசிரியர்​கள் தங்​களின் விண்​ணப்​பத்​தில் திருத்​தம் மேற்​கொள்​ளலாம்.

ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு பிறகு, ஆன்​லைன் விண்​ணப்​பங்​கள் மாவட்ட தேர்​வுக்​குழு​வின் பரிசீலனைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​படும் என்​ப​தால் அதன்​பிறகு விண்​ணப்​பத்​தில் எவ்​வித​மான திருத்​த​மும் மேற்​கொள்ள முடி​யாது என்​பதை ஆசிரியர்​களுக்கு தெரிவிக்​கு​மாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதி​காரி​களும் கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி