பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டது - மாவட்டங்களை ஆய்வு செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2025

பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டது - மாவட்டங்களை ஆய்வு செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசின் நலத்திட்டங்கள் /கல்விசார் செயல்பாடுகள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டது - மாவட்டங்களை ஆய்வு செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் . கல்வித்துறை சார்ந்த செயல்திட்டங்கள் . இல்லம் தேடிக்கல்வி , எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்து உறுதி செய்யவும் , கற்றல் கற்பித்தல் சார்ந்த பணிகள் மற்றும் மாணவர்களின் அடைவுத்திறன் போன்றவற்றை உறுதி செய்தல் பொருட்டும் , பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக ( Monitoring Officers ) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதன் அடிப்படையில் , SLAS மற்றும் திறன் இயக்கம் சார்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகளின் கற்றல் ( Focus Children ) மற்றும் அடைவுத்திறன் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட வேண்டுமென்பதால் , மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று மாணவர்களுடைய கற்றல் மற்றும் அடைவுத்திறனை மேம்படுத்துவதை ஆய்வுசெய்து ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . துறை இது தொடர்பான அறிக்கையினை இணை இயக்குநர்கள் சம்மந்தப்பட்ட இயக்குநர்களுக்கும் , இயக்குநர்கள் அரசுக்கும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி