தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2025

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா

நாள் : 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : பிற்பகல்  2 மணி முதல்...

TNEducationAwards

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா!

திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்களைச்  சிறப்பாகச் செயல்படுத்தும் 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு கேடயம் மற்றும் பள்ளி ஊக்க நிதியாக தலா ரூ.10 லட்சம் விருதுத்தொகை என ரூ.100 கோடி மதிப்பிலான 'அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது'!

கற்றல் - கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு எனப் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் 76 அரசுப் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது'!

கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற 4552 பள்ளிகளுக்குப் பாராட்டுவிழா என தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி துறை சார்பில் மிகப்பிரமாண்டமான முப்பெரும் விழா! நாளை (06-7-2025 ஞாயிறு) மாலை 4.00 மணிக்கு திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. 

கல்வி சிறந்த தமிழ்நாட்டை இன்னும் பல படிகள் உயர்த்திவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். நம் ஆசிரியர் சமூகத்தைக் கொண்டாடும் இந்த முப்பெரும் விழாவையொட்டி,  


#TNEducationAwards

என்ற hashtag-ல் 
சமூக வலை தளத்தில் பகிர்வு செய்வோம். 

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் பெருமைகளை உலகறியச் செய்வோம்.
🙏🙏🙏

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி