களமிறக்கப்பட்ட ஏஐ.. வருமான வரி ITR தாக்கல் செய்பவர்களுக்கு இனி refund கிடைக்காது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2025

களமிறக்கப்பட்ட ஏஐ.. வருமான வரி ITR தாக்கல் செய்பவர்களுக்கு இனி refund கிடைக்காது?

களமிறக்கப்பட்ட ஏஐ.. வருமான வரி ITR தாக்கல் செய்பவர்களுக்கு இனி refund கிடைக்காது?


சென்னை: வருமான வரி தாக்கல் சீசன் முழு வீச்சில் இருக்கும் நிலையில், சம்பளம் வாங்கும் தனிநபர்கள் முதல் வணிக உரிமையாளர்கள் வரை அனைவரும் தங்கள் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். வருமான வரித் துறையில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. தற்போதுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி வரி விலக்கு கோரிக்கைகளை தீவிரமாக ஆராய்கிறது. அதாவது தவறாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி விலங்குகளை ஆராய ஏஐ கருவிகளை பயன்படுத்தி வருகின்றன.


வருமான வரிக் கணக்குகளில் மோசடியான விலக்குகள் மற்றும் சலுகைகளை கோருபவர்களை குறிவைத்து, நாடு தழுவிய சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை நேற்று தொடங்கியது.


 income tax ITR


இந்த நடவடிக்கை, சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான விலக்குகளுக்கு மட்டுமல்லாமல், உடல்நலக் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A), கல்வி மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான விலக்குகளையும் உள்ளடக்கியது (பிரிவு 80E, 80EE மற்றும் 80EEB) என்று CBDT தெரிவித்துள்ளது. மேற்கண்ட விலங்குகளை பயன்படுத்தி பொய்யாக ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களை சோதனை செய்ய, அவர்களுக்கு refund வழங்காமல் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 களமிறக்கப்பட்ட ஏஐ


இப்படிப்பட்ட நிலையில்தான் வருமான வரித் துறையில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. தற்போதுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி வரி விலக்கு கோரிக்கைகளை தீவிரமாக ஆராய்கிறது. அதாவது தவறாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி விலங்குகளை ஆராய ஏஐ கருவிகளை பயன்படுத்தி வருகின்றன.


இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு, டிடிஎஸ் (Tax Deducted at Source) தரவு, வங்கி பதிவுகள் மற்றும் பிற விரிவான ஆதாரங்கள் உட்பட பல தரவு ஆதாரங்களை சோதனை செய்யும். இந்த அதிநவீன அமைப்பு, வருமான வரி அறிக்கையில் (ITR) தெரிவிக்கப்பட்டுள்ள வருமான புள்ளிவிவரங்களுக்கும் AIS (Annual Information Statement) மற்றும் Form 26AS இல் காணப்படும் புள்ளிவிவரங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை உடனடியாக கண்டறிந்து, சாத்தியமான பிழைகள் அல்லது மோசடி முயற்சிகளை சுட்டிக்காட்டுகிறது.


தவறான கோரிக்கைகளைச் செய்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். செலுத்தாத தொகைக்கு 24% ஆண்டு வட்டி விகிதம் மற்றும் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம். வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்தல் போன்ற தீவிரமான மீறல்களுக்கு, பிரிவு 276C இன் கீழ் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த AI மூலம் இயக்கப்படும் அமைப்பு வருமான வரி அறிக்கைகள் மற்றும் AIS (Annual Information Statement), Form 26AS இல் காணப்படும் புள்ளிவிவரங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை உடனடியாக அடையாளம் காண்கிறது.


கடுமையான ஆய்வு

அதிக விலக்கு கோரிய MNC ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோசடியான உரிமைகோரல்களுக்கு எதிராக அபராதம் மற்றும் வழக்குத் தொடருவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது. 150 இடங்களில் நடந்து வரும் சரிபார்ப்பு நடவடிக்கையானது, இந்த திட்டங்களுக்குப் பின்னால் உள்ள நெட்வொர்க்குகளை அகற்றுவதற்கும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் உதவும் என்று அரசு தரப்பு கூறுகிறது. சிஏக்களை வைத்து பொய்யாக வருமான வரி தாக்கல் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிஜிட்டல் பதிவுகள் உட்பட முக்கியமான ஆதாரங்களை கேட்டு விசாரணை செய்ய உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


சில ITR தாக்கல் செய்பவர்கள் சிஏக்கள் மற்றும் இடைத்தரகர்களால் மூலம் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பல மோசடி கும்பல்கள், போலியான விலக்குகள் மற்றும் சலுகைகளை கோரி கணக்குகளை தாக்கல் செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.


வருமான வரிக் கணக்குகளில் சான்றுகள் இல்லாமல் தவறான விவரங்களை அளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும். தவறான தகவல்களை அளித்தவர்களை கண்டறிய வருமான வரித்துறை பல்வேறு தரவு தளங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தியதில், மோசடியான உரிமைகோரல்களுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த நான்கு மாதங்களில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர். இருப்பினும், பலர் இன்னும் இணங்கவில்லை, ஒருவேளை இந்த மோசடி கும்பல்களின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கிறதா என்றும் விசாரணைகள் செய்யப்பட உள்ளன...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி