School Morning Prayer Activities - 28.07.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2025

School Morning Prayer Activities - 28.07.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2025

திருக்குறள் 

குறள் 161: 


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் 

தழுக்கா றிலாத இயல்பு. 


விளக்க உரை: 


ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.


பழமொழி :

Mistakes are the proof that you are trying. 


தவறுகள் உழைப்பை காட்டும் அடையாளங்காள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.



2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.


பொன்மொழி :


பொறாமை ஒரு புலி போன்றது . இரையை மட்டுமல்ல , பொறாமை கொள்பவருடைய இதயத்தையும் கிழித்து விடும் - மைக்கேல் பீர்


பொது அறிவு : 


01.பாலாறு எங்கே உற்பத்தி ஆகிறது?


நந்தி மலை- கர்நாடகா

Nandi Hills- Karnataka


02. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?


சர் ஐசக் பிட்மேன்

Sir Isaac Bitman


English words :


glint – to shine with small bright flashes of light. பளிச்சென்று மின்னுதல்


Grammar Tips: 


 Magical E


Letter V  will never come at the end of a word. To finish the word, we have to add E at the end like HavE, PavE, LovE, cavE.


அறிவியல் களஞ்சியம் :


 எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.


ஜூலை 28


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.


உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலகக் கல்லீரல் அழற்சி நாள்


உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது

நீதிக்கதை


 நரியின் சமயோசித புத்தி


ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. 


சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. 


சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. 


நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. 


நீதி :


நரியைப்போன்ற சமயோசித அறிவு எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.07.2025


⭐மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை


⭐தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் - தமிழ்நாடு அரசு அனுமதி


⭐தொடர் கனமழை - ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


⭐ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள் - பிரதமர் மோடி பெருமிதம்


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 இங்கிலாந்து   இந்தியா  இடையிலான டெஸ்ட் தொடரில் 

90 ரன்னில் அவுட்டாகி சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்


🏀இங்கிலாந்து   இந்தியா  இடையிலான டெஸ்ட் தொடரில் சதம் விளாசி அவுட்டானார் கேப்டன் கில்.


Today's Headlines


⭐1 lakh cubic feet of water are likely to be released from Mettur Dam, so

A flood warning is given to the coastal people. 


⭐ The Tamil Nadu government allows street dogs can be euthanized.


⭐ Water flow increases in Hogenakkal Falls due to  Continuous heavy rains. 


⭐Prime Minister Modi has proudly mentioned that the Chola Empire was the one that ruled democratically under the Kudavolai system.


 SPORTS NEWS 


🏀 KL Rahul missed his century by losing his wicket in the 90th run in the England-India Test series. 


🏀 Captain Gill scored a century in the England-India Test series.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி