School Morning Prayer Activities - 30.07.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2025

School Morning Prayer Activities - 30.07.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2025

திருக்குறள் 

குறள் 184: 


கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க 

முன்னின்று பின்னோக்காச் சொல். 


விளக்க உரை: 


எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.


பழமொழி :

Be the change you want to see. 


நீ மாற்றத்தை விரும்பினால், நீயே அதற்கான முன்னோடியாக இரு.


இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.



2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.


பொன்மொழி :


பொறுமையும் விடாமுயற்சியும் மலையையே புரட்டி விடும் - மகாத்மா காந்தி


பொது அறிவு : 


01. மனித ரத்த வகைகளை கண்டுபிடித்தவர் யார்?


கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்

Karl Landsteiner


02.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

 Constantine Joseph Beschi


English words :


nostril - nose passage மூக்குத் துளை; 


odorous - sweet smelling நறுமணம்


Grammar Tips: 


 She has excellent oral skills for music 


In this sentence, instead of oral, we should use AURAL skills 


Oral related to the mouth 


AURAL  related to the hearing


அறிவியல் களஞ்சியம் :


 ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிக்கும்.


ஜூலை 30


டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாள்


முத்துலட்சுமி (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.


நீதிக்கதை


புள்ளிமான்கள்


ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது. 


எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? "நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள்" என்றன புள்ளிமான்கள். 


'சரி, உங்களில் யார் திறமையானவர்கள்?' என்று கேட்டது சூரியன்.


 'நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்!' என்றன புள்ளிமான்கள். 


சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது. 


சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. 


சூரியன் ’ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டது. 


ஒரு புள்ளி மான் சொன்னது, ”நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்” என்றது. 


இன்னொரு புள்ளிமானும், ”நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்” என்று சொன்னது. 


இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, ”அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும். 


நீதி :

நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

 

இன்றைய செய்திகள் - 30.07.2025


⭐காலாண்டு, அரையாண்டு தேர்வு: அட்டவணைகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.


⭐புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை பாதுகாக்கிறோம் - பன்னாட்டுப் புலிகள் தினத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் உரை.


⭐ துருக்கியில், இதுவரை இல்லாத வகையில் 122.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் அங்கு காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 


⭐ கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 105 இந்தியர்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.


🏀எனது சாதனை பயணம் தொடரும்: உலக கோப்பை செஸ் சாம்பியன் திவ்யா நம்பிக்கை.


Today's Headlines


⭐Our educational minister, Anbil Mahesh, has released the  Quarterly and Half-yearly exam schedules.


⭐Our Chief Minister, M.K. Stalin, delivered a speech on International Tiger Day, stating that we should protect tigers, as they are the soul of our forests.


⭐ Turkey has recorded an all-time high temperature of 122.9 degrees Fahrenheit, sparking wildfires that have killed 14 people so far.


⭐ Over 3,000 people, including 105 Indians, have been arrested in a cyber fraud raid in Cambodia.


 SPORTS NEWS 


🏀 The West Indies team suffers a crushing defeat to Australia on Home Town.


🏀 My journey of achievement will continue: World Cup chess champion Divya Bhasma.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி