சென்னை, திருப்பூரைச் சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2025

சென்னை, திருப்பூரைச் சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

 

தமிழகத்​தில் 2 ஆசிரியர்​கள் உட்பட தேசிய அளவில் 45 பேர் தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.


ஆசிரிய​ராக பணி​யாற்றி குடியரசு தலை​வ​ராக உயர்ந்த டாக்​டர் ராதாகிருஷ்ணனை போற்​றும் வகை​யில் மத்​தி​ய-​மாநில அரசுகள் சார்​பில் ஆண்​டு​தோறும் நல்​லாசிரியர் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன.


அந்த வகை​யில், மத்​திய கல்வி அமைச்​சகம் சார்​பில் இந்​திய அளவில் சிறந்த ஆசிரியர்​களுக்கு தேசிய நல்​லாசிரியர் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்​கப்​பரிசு, வெள்​ளிப்​ப​தக்​கம், பாராட்​டுச்​ சான்​றிதழ் ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. டெல்​லி​யில் செப்​டம்​பர் 5-ம் தேதி நடை​பெறும் ஆசிரியர் தின விழா​வின்​போது இவ்​விருது வழங்​கப்​படும்.


இந்​நிலை​யில், 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்ட ஆசிரியர்​களின் பட்​டியலை மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் பள்​ளிக்​கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, தேசிய அளவில் மொத்​தம் 45 பேர் தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அந்த பட்​டியலில் தமிழகத்​தில் இருந்து 2 ஆசிரியைகள் இடம்​பெற்​றுள்​ளனர்.


சென்னை மயி​லாப்​பூர் பி.எஸ்​.சீனியர் செகண்​டரி பள்ளி (சிபிஎஸ்இ பள்​ளி) ஆசிரியை ரேவதி பரமேஸ்​வரன், திருப்​பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பார​தி​யார் நூற்​றாண்டு அரசு பெண்​கள் மேல்​நிலைப்​பள்ளி ஆசிரியை எம்​.​விஜயலட்​சுமி ஆகியோர் தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்​வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.


அதே​போல், புதுச்​சேரி​யில் தில்​லை​யாடி வள்​ளி​யம்மை அரசு உயர்​நிலைப்​ பள்ளி ஆசிரியர் வி. ரெக்ஸ் என்ற ராதாகிருஷ்ணனுக்கு தேசிய நல்​லாசிரியர் விருது கிடைத்​துள்​ளது. டெல்​லி​யில் செப்​டம்​பர் 5-ல் நடை​பெறும் ஆசிரியர் தின​விழா​வில் குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு தேசிய நல்​லாசிரியர் விருதுகளை ஆசிரியர்​களுக்கு வழங்கி கவுரவிக்​கிறார்.


ஆசிரியைகள் பேட்டி: தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்ள ஆசிரியை விஜயலட்​சுமி கூறும்​போது, ‘‘நான் கடந்த 27 ஆண்​டு​களாக புவி​யியல் ஆசிரிய​ராக பணி​யாற்றி வரு​கிறேன். எனக்கு தேசிய நல்​லாசிரியர் விருது கிடைத்​திருப்​பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது. நமது மாணவர்​களை ஆளுமை மிக்​கவர்​களாக உரு​வாக்க வேண்​டும் என்​பது எனது விருப்​பம். பொது​வாகவே, எனது கற்​பித்​தல் வெறும் புத்​தகத்​துடன் இல்​லாமல் கள ஆய்வை அடிப்​படை​யாகக் கொண்டு அமைந்​திருக்​கும். கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசின் நல்​லாசிரியர் விருது கிடைத்​தது எனகு மிகுந்த ஊக்​கத்தை அளித்​தது” என்று குறிப்​பிட்​டார்.


ஆசிரியை ரேவதி பரமேஸ்​வரன் கூறுகை​யில், ‘‘தேசிய நல்​லாசிரியர் விருது கிடைத்​தது எனக்கு மகிழ்ச்​சி​யை​யும் மனநிறைவை​யும் தரு​கிறது. கடந்த 34 ஆண்டு கால​மாக கணித ஆசிரிய​ராக​வும், 8 ஆண்​டு​கள் பள்ளி முதல்​வ​ராக​வும் பணி​யாற்றி வரு​கிறேன். மாணவர்​களுக்கு கணித பாடத்தை எப்படி எளிமை​யாக சொல்​லித் தர முடி​யும் என்​பதை குறித்​துத்​தான் தொடர்ந்து சிந்​தித்து வரு​கிறேன். இது தொடர்​பான சர்​வ​தேச கருத்​தரங்​கு​களி​லும் பங்​கேற்​றுள்​ளேன். கணிதம் பாடம் கடினம் என்ற கருத்து மாணவர்​கள் மத்​தி​யில் நில​வு​கிறது. அதை போக்க வேண்​டும் என்​பது​தான் எனது லட்​சி​யம். எனது உழைப்​புக்கு இந்த விருது மூலம் ஊக்​கம் கிடைத்​திருப்​ப​தாக கருதுகிறேன்’' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி