மாநிலக் கல்விக் கொள்கை-2025 தொடர்பான விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2025

மாநிலக் கல்விக் கொள்கை-2025 தொடர்பான விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

 

மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பான பல்​வேறு விமர்​சனங்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவ​மைப்பு குழு​வில் இடம் பெற்​றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், பின்பு கருத்து வேறு​பாடு​களால் அதிலிருந்து வில​கி​னார். தற்​போது வெளி​யாகி​யுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பாக பல்​வேறு குற்றச்சாட்​டு​களை முன்​வைத்து அறிக்கை வெளி​யிட்​டிருந்​தார்.


அதற்கு விளக்​கம் அளித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு விவரம்: மாநிலக் கல்விக் கொள்​கை- 2025 கல்வியாளர்​கள், பாடத்​திட்ட நிபுணர்​கள், பள்ளி நிர்​வாகி​கள் மற்​றும் கல்​வித்​துறை அதி​காரி​கள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு​வால் தயாரிக்​கப்​பட்​டது. இதில் ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், குழந்​தைகள் நல அமைப்​பு​கள், பெற்​றோர் உட்பட பல்வேறு தரப்​பிடம் இருந்து ஆலோ​சனை​களும் பெறப்​பட்​டன. இது அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்​யப்​பட்டு தேவைக்​கேற்ப மாறுதல்களை மேற்​கொள்​ள​வும் அனு​ம​திக்​கிறது.


இந்த கொள்கை தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கை​யைத் தொடர்ந்து செயல்​படுத்​து​வதை வலி​யுறுத்​துகிறது. உயர்​கல்வி சேர்க்கைக்​கான நுழைவுத் தேர்​வு​களை எதிர்க்​கிறது. தமிழ் கலாச்​சா​ரத்தை பாது​காப்​ப​தை​யும், தமிழ் மொழியை மேம்படுத்துவதை​யும், அதே​நேரத்​தில் உலகளா​விய ஈடு​பாட்​டுக்கு மாணவர்​களை தயார்​படுத்​து​வதை​யும் நோக்​க​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.


மாநிலக் கல்விக் கொள்கை பள்ளி மேலாண்​மைக் குழுக்​கள் மற்​றும் உள்​ளூர் முடி​வெடுத்​தலை வலுப்​படுத்​துகிறது. தேசிய கல்விக் கொள்​கை​யின் மும்​மொழிக் கொள்​கை, நுழைவுத் தேர்​வு​கள் ஆகிய​வற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்​படையாக மறுக்​கிறது. 10+2 அமைப்​பை​யும் தொடர்ந்து தக்க வைத்​துள்​ளது. கல்வி மீண்​டும் மாநிலப் பட்​டியலுக்கு மாற்​றப்பட வேண்​டுமென அறை​கூவல் விடுக்​கிறது. தனி​யார்​மய​மாதலுக்கு எதி​ரானது.


அதே​போல், மாநில கல்விக் கொள்​கை​யில் எந்த ஒரு பகு​தி​யும் சிறு​பான்​மை​யினர் பாது​காப்பை குறைக்​க​வில்​லை. அனைத்து வாய்ப்பு மறுக்​கப்​பட்ட குழு​வினர்​களிடம் உள்ள கற்​றல் இடைவெளி​களை கண்​டறிந்​து, அவர்​களுக்கு கல்வி உதவி மற்​றும் குறைதீர் கற்​றலை வழங்க கொள்கை உறுதி செய்​கிறது.


இது தமிழகத்​தின் கல்​வித் தனித்​து​வத்​தைப் பாது​காத்து உலகளா​விய சவால்​களுக்கு கற்​போரைத் தயார் செய்​கிறது. அதனுடன் மாநில சுயாட்​சியை நிலைநிறுத்​தி, சமூக நீதியை வலுப்​படுத்​தி, நலத்​திட்​டங்​களை மேம்​படுத்​துகிறது. இவ்​வாறு அ​தில்​ கூறப்பட்டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி