மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , அக்டோபர் - 2025 அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2025

மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , அக்டோபர் - 2025 அறிவிப்பு.

 

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை - 6 தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , அக்டோபர் - 2025 

செய்திக் குறிப்பு பள்ளி மாணவ , மாணவியர்கள் அறிவியல் , கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது . 2025-2026 - ஆம் கல்வியாண்டிற்கான " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " 11-10-2025 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது.

 இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் . தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள ஏழு ( 7 ) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத " இயல் 2 - ல் உள்ள மேகம் , பிரும்மம் ; இயல் 6 - ல் முத்தொள்ளாயிரம் ; மற்றும் இயல் 7 - ல் அக்கறை " ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் . இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும் . அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும் . 2025-2026 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ( மெட்ரிக் / CBSE / ICSE / உட்பட ) மாணவர்கள் , 11.10.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

 மாணவர்கள் floor courbes oor www.dge.tn.gov.in Groom இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 04.09.2025 பூர்த்தி 

 நாள் : 21.08.2025

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி