என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 1,86,475 இடங்களில், இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிவில் 92,423 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வில், 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
அவர்களில் 51,429 பேர் இடங்களை உறுதி செய்துள்ளனர். மூன்றாம் சுற்று கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி முடிவடைய உள்ளது. தற்போதுவரை 1,43,852 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வு 21-ஆம் தேதி தொடங்கும். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி