தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) கடந்த 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து, 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்கள் கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டம் கடந்த ஆண்டு முதல் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வி ஆண்டின் முதல் எஸ்எம்சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்றது.
அதை தொடர்ந்து, இந்த மாதத்துக்கான கூட்டம் இன்று மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம். திறன் இயக்கம், போக்குவரத்து வசதி, போதைப் பொருள் விழிப்புணர்வு, பள்ளி தூதுவர்கள், மணற்கேணி செயலி, இல்லம் தேடி கல்வி, கலைத் திருவிழா, இடைநிற்றல் கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி