இந்த ஆண்டு முதல்முறையாக பிஎட் சேர்க்கைக்கு இணைய வழியில் கலந்தாய்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்...
பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்பட்டு வந்தது. இதனால், வெளியூர் மாணவர்கள் சென்னைக்கு வந்துசெல்லும் நிலை இருந்தது.
இந்த நிலையில், வெளியூர் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், முதல்வர் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வை இணைய வழியில் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 4-ம் தேதி (நேற்று) முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும்.
பி.எட். படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்று, தங்களுக்கு விருப்பமான கல்லூரியைதேர்வு செய்யலாம். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன. மொத்தம் 3,545 பேர் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி