பொறியியல் படிப்புகளில் புதிய தொழில்நுட்ப பாடங்கள்: ஜப்பான், ஜெர்மன், கொரிய மொழிகள் கற்கவும் வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2025

பொறியியல் படிப்புகளில் புதிய தொழில்நுட்ப பாடங்கள்: ஜப்பான், ஜெர்மன், கொரிய மொழிகள் கற்கவும் வாய்ப்பு

 

பொறி​யியல் பட்​டப் படிப்​பில் புதிய தொழில்​நுட்ப பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும், மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மன், கொரிய மொழிகள் கற்​க​வும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் அண்ணா பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்ளது.


இது தொடர்​பாக அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜெ.பிர​காஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: அண்ணா பல்​கலைக்​கழகம், தனது இணைப்​புக் கல்​லூரி​களில் பொறி​யியல் பட்​டப்​படிப்​பில் (பிஇ, பிடெக்) புதிய தொழில்​நுட்ப பாடங்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இந்த பாடங்​கள், வளர்ந்து வரும் தேவை​கள் மற்​றும் உலகளா​விய கல்வி மாற்​றங்​களுக்கு ஏற்ப வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. இது, மாணவர்​களின் கல்வி மற்​றும் தொழில்​முறை வளர்ச்​சியை மேம்​படுத்​தும்.


புதிய பாடத் திட்​டத்​தின் முக்​கிய அம்​ச​மாக பொருள் மேம்​பாடு (Product development) என்​பதை குறிக்​கோளாகக் கொண்டு 5-வது செமஸ்​டரில் இருந்து டிசைன் புராஜெக்ட் என்ற பாடம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் பெறப்​படும் மதிப்​பெண்​களை​யும் சேர்த்து 8.5 மற்​றும் அதற்கு மேல்சிஜிபிஏ பெற்​றவர்​களுக்கு பொறி​யியல் பட்​டத்​துடன் கூடு​தலாக சிறப்பு பட்​டம் (ஆனர்ஸ் டிகிரி) மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். இது, உலகளா​விய சவால்​களை எதிர்​கொள்ள உதவும்.


உலகளாவிய வேலைவாய்ப்பு: மேலும், மாணவர்​களின் ஆங்​கில மொழித்​திறனை மேம்​படுத்​துவதுடன், வெளி​நாட்டு மொழிப் பாட​மும் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி, மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மனி, கொரிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்​வுசெய்து கற்​கலாம். உலகளா​விய வேலை​வாய்ப்​பு​களை மேம்​படுத்த இது துணைபுரி​யும்.


புதிய பாடத் திட்​டத்​தின்​கீழ் மாணவர்​கள் நடை​முறை பயன்​பாடு​கள் மற்​றும் தொழில்​துறை நடை​முறை​களை நன்கு அறிந்​து​கொள்​ளும் வகை​யில் இரண்டு செமஸ்​டர்​களில் தொழில்​துறை சார்ந்த பாடங்​கள் இடம்​பெறும். தற்​போது மாறி வரும் தொழில்​துறை தேவை​களுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​கள் குறித்த பாடங்​கள் புதிய பாடத்​திட்​டத்​தில் இடம்​பெறுகின்​றன. இதன்​மூலம், மாணவர்​கள் ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வு, மெஷின் லேர்​னிங், டேட்டா சயின்ஸ்போன்ற முன்​னணி தொழில்​நுட்​பங்​களில் அறி​வு​பெறு​வர். மேலும்,உலகளா​விய சவால்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் காலநிலை மாற்​றம் மற்​றும் நிலைத்​தன்மை குறித்த பாட​மும் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


தொழில்​நுட்ப அறிவு மற்​றும் தொழில்​முறை நிபுணத்​து​வத்​துடன், மாணவர்​கள் வேக​மாக மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப தங்​களை தகவ​மைத்​துக்​கொள்​ளும் நோக்​கில் முதல் 2 செமஸ்​டர்​களில்வாழ்​வியல் திறன்​கள் குறித்த பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​கின்​றன. இதன்​மூலம் மாணவர்​கள்உணர்ச்சி நுண்​ணறிவு , நேர்​மறைஎண்​ணங்​கள் போன்​றவற்​றின் முக்​கி​யத்​து​வத்தை புரிந்​து​கொள்ளமுடி​யும். மேலும், முதல்​முறை​யாக விளை​யாட்​டுத்​திறனை வளர்க்​க​ உடற்​கல்வி படிப்​பு​களும் பாடத்​திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.


மேற்​குறிப்​பிட்ட புதிய பாடங்​கள் பொறி​யியல் பட்​ட​தா​ரி​களின் வேலை​வாய்ப்பு மற்​றும் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அதி​கரிப்​பதுடன் மட்​டுமின்​றி, அவர்​கள் எதிர்​கால சவால்​களை ஆற்​றலோடு எதிர்​கொள்​ள​வும்​ பெரிதும்​ உதவும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி