புதிய வருமான வரி மசோதா லோக்சபாவில் விவாதமின்றி நேற்று நிறைவேற்றப்பட்டது. திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், விவாதமின்றி மசோதா நிறைவேறியது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுதும் அமலில் இருந்த வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. பழைய சட்டத்தில் இருந்த பல சிக்கலான நடைமுறைகள் களையப்பட்டு, எளிமைப்படுத்திய வடிவில் புதிய வருமான வரி மசோதா - 2025 இயற்றப்பட்டது.
இதையடுத்து இம்மசோதாவை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்., 13ம் தேதி லோக்சபாவில் அறிமுகம் செய்தார். அப்போது, பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததால், தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
அபராத கட்டணம் பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்ரீ பைஜெயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு, 4,575 பக்கங்கள் கொண்ட 285 பரிந்துரைகளை வழங்கியது. புதிய வருமான வரிச் சட்டத்தில் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடாத நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
வரி செலுத்துவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பின்னரும் அபராதக் கட்டணம் செலுத்தாமல், டி.டி.எஸ்., எனப்படும் முன்கூட்டியே பிடித்த வரி பணத்தை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து அனைத்து பரிந்துரைகளையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி