அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை பணியிடங்கள் நிா்ணயம் செய்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மாணவா் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளா் நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவா் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியா் பணி இடங்கள் நிா்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியா்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியா்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளா் நிா்யணம் செய்யப்படுகின்றனா். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு 1:40 ஆசிரியா் - மாணவா் விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவா்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவா் எண்ணிக்கை 15-ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பணிநிா்ணயம் செய்யும்போது மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாடவேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிா்ணயம் செய்யலாம்.
இதுதவிர ஒரு பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அதில் பணியாற்றுபவா்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும். அதேநேரம் ஒருமுறை பணிநிரவல் செய்த ஆசிரியா்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யக்கூடாது. எனினும், சென்ற பணிநிரவல் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியா் இந்த ஆண்டும் விருப்பம் தெரிவித்தால் அவரை தற்போதைய பணியாளா் நிா்ணயித்தின்போது உபரியாக காண்பிக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதுநிலை ஆசிரியா்களைப் பணிநிா்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PG ASSIST kku TET exam vaikkanum..... Op adikkira casekal
ReplyDeleteDirector proceeding letter upload. Please
ReplyDelete