DSE - August 2025 School Children's Movie - The White Balloon - Movie Screening - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2025

DSE - August 2025 School Children's Movie - The White Balloon - Movie Screening

ஆகஸ்ட் மாத சிறார் திரைப்படம் The White Balloon திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும் ஏராளம் . திரைப்படங்களால் அறம் மற்றும் சமத்துவமற்ற கருத்துகளை , கலந்துரையாடல்களை பற்றி எளிதான வகையில் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்திவிட முடியும்.

 மாணவர்களுக்கு சமூக நீதி , சமத்துவம் , அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும் , திரைப்படக் கலையை ரசிப்பதற்கும் , கதை , திரைக்கதை , நடிப்பு , உடையலங்காரம் . பின்னணி வடிவமைப்பு , இசை , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு , இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திறனை வளர்க்கும் நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் திரையிடல்கள் நடத்தப்படுகிறது . தமிழ்நாட்டில் அனைவராலும் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் பாராட்டப்பட்டவற்றுள் மிகவும் முக்கியமானது திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட்ட நிகழ்வு.

 பார்வையில் காணும் செயல்முறைகளின்படி , சென்ற ஆண்டை தொடர்ந்து 2025. 2026 ஆம் கல்வியாண்டில் , அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஆகஸ்ட் மாதம் " தி ஒயிட் பலூன் . The White Balloon + திரைப்படமானது திரையிடப்பட உள்ளது.

DSE - Aug 2025 Movie Screening.pdf

👇👇👇👇

Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி