ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ‘கேட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுவதால் இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த முறை கேட் தேர்வை கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேட் நுழைவுத் தேர்வில் என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளின் கீழ் கணினி வழியில் தேர்வு நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும் இந்த தேர்வை ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்களை மட்டும் தேர்வு செய்து எழுதலாம்.
2026ம் ஆண்டுக்கான கேட் தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்களும் இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ளவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (ஆகஸ்ட் 25-ம்தேதி) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத விருப்பம் உள்ளர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கூடுதல் விவரங்களுக்கு www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இந்த இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 25-ம்தேதி) முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘கேட் 2026’ தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு மார்ச் 19-ம்தேதி வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி