School Morning Prayer Activities - 12.08.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2025

School Morning Prayer Activities - 12.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.08.2025

திருக்குறள் 

குறள் 284: 

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் 

வீயா விழுமந் தரும். 


விளக்க உரை: 


களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.


பழமொழி :

Without a goal,effort is directionless. 


இலக்கு இல்லாத உழைப்பு திசை தெரியாமல் போகும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.


பொன்மொழி :


நமது நம்பிக்கைகள் தகரும்போது பொறுமையே நம்மை பாதுகாக்கும் - தாமஸ் ஃபுல்லர்


பொது அறிவு : 


01.பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


ஆடம் ஸ்மித் (Aadam smith)


02.இந்தியாவில் "முணுமுணுக்கும் அரங்கம்"(Whispering gallery) எங்குள்ளது?


கோல்கும்பாஸ்- கர்நாடகா

(Gol Gumbaz- Karnataka)


English words :


gangway–a passage between rows of seats in a cinema, an aircraft, etc.திரையரங்கு, விமானம் முதலியவற்றில் இருக்கை வரிசைகளுக்கு இடையே உள்ள செல்வழி்.


Grammar Tips: 


 How to use or where to use At/On/ In


At = time, age, and a particular  place 


Ex: At 10 O'clock 


At the age of 40


At the office


அறிவியல் களஞ்சியம் :


 உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் 1 1/4 கிலோ


ஆகஸ்ட் 12


விக்கிரம் சாராபாய் அவர்களின் பிறந்தநாள்


விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971)என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.


உலக யானைகள் நாள்


உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.



தேசிய நூலக தினம். 


ஆகஸ்ட் 12 - இன்று தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.  இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன. நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்.


நீதிக்கதை

 பொய்


மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன். 


ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான். 


பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான். 


ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள். 


நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன். 


மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன். 


உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான். 


கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான். 


மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர். 


சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன். 


அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன். 


இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி. 


இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர். 


நீதி :

ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.


இன்றைய செய்திகள் - 12.08.2025


⭐நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண் அறிவித்த வனத்துறை.

 உதவி எண்: 1800 425 4343


⭐நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


⭐பீகாரில் கனமழையால் வெள்ளம்: 16 லட்சம் மக்கள் பாதிப்பு-மீட்புப்பணி தீவிரம்


🏀 விளையாட்டு செய்திகள்


🏀மக்களவையில் தேசிய விளையாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது:மக்களவையில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாவை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.


🏀 இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதே தனது லட்சியம் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.


Today's Headlines


⭐The Forest Department has announced a helpline number to report wildlife movements and damage caused by animals in the Nilgiris district. Helpline number: 1800 425 4343 


⭐ The Teacher Selection Board announced the Teacher Eligibility Test (TET) scheduled on November 1st and 2nd


⭐In  Bihar, Rescue work intensifies for flood due to heavy rain, and one lakh people were affected 


 SPORTS NEWS 


🏀 The National Sports Bill was passed in the Lok Sabha. The Indian Parliament has passed the National Sports Administration Bill and the National Anti-Doping Amendment Bill in the Lok Sabha.


🏀 Indian women's cricket team captain Harmanpreet Kaur has said that her goal is to lead the team to victory in the upcoming ICC Women's Cricket World Cup in India.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி