School Morning Prayer Activities - 15.08.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2025

School Morning Prayer Activities - 15.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.08.2025

திருக்குறள் 

குறள் 215: 


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 

பேரறி வாளன் திரு.     


விளக்கம்


பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.


பழமொழி :

Face fear with action. 


பயத்தை செயலால் எதிர்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.


பொன்மொழி :


என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன் ஏனென்றால் நான் 100 வெற்றிகளைப் பார்த்தவன் அல்ல . ஆயிரம் தோல்விகளை பார்த்தவன். 


- தாமஸ் ஆல்வா எடிசன்


பொது அறிவு : 


01."சுதந்திரம் எனது பிறப்புரிமை" என்று முழங்கியவர் யார்?


பால கங்காதர திலகர்

Bal Gangadhar Tilak


02."இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன்" (Grand old man of India)என்று அழைக்கப்பட்டவர் யார்?


தாதாபாய் நௌரோஜி

Dadabai Naoroji


English words :


revival –the act of becoming or making something strong or popular again.புத்தெழுச்சி. மறக்கப்பட்ட ஒன்று மீண்டும் வலிமை பெறுதல்


Grammar Tips: 


Tips to write Your and You're without confusion 

Your vs. You're:

"Your" is possessive 

e.g., "your book" is on the table. "You're" is a contraction of "you are". 

Ex: I hope you're also coming to the independence day function 


அறிவியல் களஞ்சியம் :


 மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.


ஆகஸ்ட் 15


இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.


இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.


ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.


நீதிக்கதை


 உருவத்தை பார்த்து பழகாதே


ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.


அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...


ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.


உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.


மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.


இன்றைய செய்திகள் - 15.08.2025


⭐ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு 12 பேர் உயிரிழப்பு


⭐ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்.3ல்

தமிழகம் வருகை: மத்திய பல்கலை விழாவில் பங்கேற்கிறார்


⭐உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.


⭐ தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀அமெரிக்காவின் பைன்ஹர்ஸ்டில் நடைபெற்ற மதிப்புமிக்க அமெரிக்க கிட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பில், பெங்களூருவைச் சேர்ந்த 9 வயது வேதிகா பன்சாலி, பெண்கள் 9 பிரிவில் வெற்றி பெற்று, முதல் இந்திய வீராங்கனையானார்.


Today's Headlines


⭐In Jammu and Kashmir, Massive landslide due to cloudburst and 12  people were died  


⭐President Draupadi Murmu to visit Tamil Nadu on September 3: Participates in Central University function .


⭐700 stray dogs have been caught near Red Fort in New Delhi as per the Supreme Court order.


⭐The Madurai bench of the High Court has ordered the removal of flexboards and banners placed in public places without permission across the Tamil Nadu.


 *SPORTS NEWS* 


🏀At the prestigious US Kids World Championships held in Pinehurst, USA, 9-year-old Vedika Bhansali from Bengaluru became the first Indian player to won the women's 9 category.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி