School Morning Prayer Activities - 19.08.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2025

School Morning Prayer Activities - 19.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.08.2025

திருக்குறள் 

குறள் 343: 


அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.   


  விளக்க உரை: 


ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.


பழமொழி :

Consistency is stronger than talent.


 தொடர்ச்சியான முயற்சி, திறமையை விட வலிமையானது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.


2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.


பொன்மொழி :


நம்பிக்கையும் அன்பும் இல்லாவிட்டால் ஆற்றல் அழிந்து போகும் - ரஸ்கின்


பொது அறிவு : 


01.நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது? 


                 சிலப்பதிகாரம்


(Cilappathikaram)


02. அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 


         அரிஸ்டாட்டில் (Aristotle)"


English words :


thrive – to grow or develop well,செழித்தோங்கு


Grammar Tips: 

Double negatives happen when two negative expressions are used together in a sentence

Unlike in some languages, double negative sentences in English typically turns into a positive statement 


Ex: I don't want nothing. 

This is double negative statement 

 Correct statement is

I don't want anything.


அறிவியல் களஞ்சியம் :


 ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 


ஆகஸ்ட் 19


உலக புகைப்பட நாள்


உலக புகைப்பட நாள் (World photograph day)புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.


உலக மனிதநேய நாள்


உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். 


நீதிக்கதை


 வியாபாரியின் கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 


ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 


மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 


அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 


அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 


குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 


நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 


குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 


நீதி :


அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.


இன்றைய செய்திகள் - 19.08.2025


⭐ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்க மாணவர்களுக்கு அனுமதி. சென்னை பல்கலைக்கழகம் திட்டம்


⭐கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு-தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை


⭐ஒடிசாவில் 4 இடங்களில் தங்க சுரங்கம்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀செப்டம்பர் 9-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானி துபாயில் மோதுகிறது


🏀 சின்சினாட்டி மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் டென்னிஸ் உலக நம்பர் 1 ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2

கார்லோஸ் அல்கராஸை எதிர்கொள்கிறார்.


Today's Headlines


⭐Madras University Project declared the students allowed to pursue  double degrees courses simultaneously. 


⭐Due to the release of excess water from Karnataka dams,  flood alert has been declared for 11 districts in Tamil Nadu.


⭐In Odisha there are 4 locations for gold mining and from there it was estimated that 20 tons of gold can be gained.



 *SPORTS NEWS*


🏀Asia Cup cricket series start on September 9.  India from Group A, will face Pakistan in Dubai on 14th.


🏀 Tennis world No. 1 Janik Sinner will face world No. 2 Carlos Alcaraz in the final of the Cincinnati Masters.


Covai women ICT_போதிமரம்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி