திருக்குறள்
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம்:
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
பழமொழி :
Your effort today is your achievement tomorrow.
இன்றைய உழைப்பு, நாளைய சாதனை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அதிகாலை எழுவதே ஆரோக்கியம்.
2. எனவே அதிகாலையில் எழுந்து எனது பணிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
எழுந்திருங்கள் , விழித்திருங்கள் , குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைத்திருங்கள் - விவேகானந்தர்
பொது அறிவு :
" 01.தமிழ்நாட்டின் கற்பகவிருட்சம் என்று அழைக்கப்படும் மரம் எது?
பனைமரம்- Palm tree
02. "" தமிழ் நாடகத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்த முதலியார்
Pammal Sambandha Mudaliyar"
English words :
ceremony – a formal public or religious event; முறைசார்ந்த பொதுநிகழ்ச்சி அல்லது சமயச் சடங்கு.
Grammar Tips:
When we use two subject in a sentence including 'I' as a pronoun , the subject is used to first
We have to follow as,
My friend and I went for a movie ( correct)
I and my friend went for a movie (wrong)
அறிவியல் களஞ்சியம் :
நாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார். நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 26
அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள்
* அன்னை தெரசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார்.
* இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
* நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
* முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். 1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.
* இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
* அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.
நீதிக்கதை
வியாபாரியின் கதை
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது.
ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.
மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.
அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான்.
அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான்.
குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார்.
நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான்.
குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான்.
நீதி :
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.
இன்றைய செய்திகள் - 26.08.2025
⭐அறிவியல் சார்ந்த முற்போக்கு சிந்தனையோடு பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது- அமைச்சர் அன்பில் மகேஷ்
⭐இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
⭐இந்தியாவுடன் இமாச்சல் வழியே மீண்டும் வர்த்தகம் - சீனா கொள்கை அளவில் ஒப்புதல்
⭐காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீ. ரைபிள்-3 பொஷிஷன் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
🏀 ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ்(ரஷியா) பெஞ்சமின் போன்சி(இத்தாலி) ஆகியோர் மோதினர்.இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.
Today's Headlines
⭐Minister Anbil Mahesh spoke about School education department was working with scientific progressive
⭐Chief Minister M.K. Stalin has inaugurated the Institute of Journalism .
⭐Resuming trade with India via Himachal Pradesh - China approves in principle
⭐Israeli airstrike on hospital in Gaza and 8 killed
SPORTS NEWS
🏀India's Aishwarya Pratap Singh won gold at the Asian Shooting Championship in Kazakhstan.
🏀Benjamin won the first round of the singles competition.
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி