திருக்குறள்
குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
விளக்க உரை:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
பழமொழி :
Dreams are the seeds of success.
கனவுகள் தான் வெற்றியின் விதைகள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அதிகாலை எழுவதே ஆரோக்கியம்.
2. எனவே அதிகாலையில் எழுந்து எனது பணிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
எந்த இடத்தில் நீங்கள் வசதியாக உணர்கிறீர்களோ, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதியனவற்றைத் தேடத் தொடங்குங்கள். அதுவே உங்களை வெற்றியாளர்களாக உருவாக்கும் - வால்ட் டிஸ்னி
பொது அறிவு :
01.தமிழ்நாடு அரசின் காகித தொழிற்சாலை எங்குள்ளது?
புகழூர்- கரூர்- Pugalur-Karur
02. இந்தியாவில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பயிர் எது?
நெல் - Rice
English words :
idyllic – very pleasant and peaceful,பெரு மகிழ்வும் அமைதியும் அளிக்கிற.
Grammar Tips:
Compliment vs Complement
Compliment (with an "i"):
This word is used when you're expressing praise or admiration for someone or something.
Ex: The teacher complimented her dress.
Complement (with an "e"):
This word is used when something enhances or completes something else.
Ex: A tasty dessert can complement a meal.
அறிவியல் களஞ்சியம் :
தரவு துயில் நெறியின் வெற்றி, நோயாளி தரவு துயிலாழ்த்துவோனிடம் கொண்டுள்ள நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பொறுத்தே அமையும், நோயாளி இயல்பான நிலைக்கு வந்துவிட்டால் அவனுடைய மனம் எளிய குழந்தை மனநிலைக்கு வந்துவிடும். இளமையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவனை ஆழமாகத் தாக்கிய நிகழ்ச்சிகளும், அவன் நினைவிற்கு அடிக்கடி வரும். இந்தச் சூழ்நிலையில் துயிலாழ்த்துவோன் பயிற்சி பெற்ற மருத்துவனாகவும் இருந்தால் அவனுடைய அச்சங்களைப் புரிந்து கொண்டு அவனுக்கு உதவ முடியும்.
ஆகஸ்ட் 29
தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்
தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் , 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
நீதிக்கதை
வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை
ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.
ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான்.
பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!
நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.
ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லாததால், வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!
ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமுக்கு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.
எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். ஆனால் பறவையை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான்.
வீட்டிற்குச் சென்றதும் பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.
மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.
பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை.
எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.
அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.
நீதி :
உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.
இன்றைய செய்திகள் - 29.08.2025
⭐புதிய தோற்றத்துடன் எழும்பூர் ரெயில் நிலையம் உருவாகிறது
⭐பருத்திக்கான இறக்குமதி வரிவிலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு
⭐அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு-மு.க.ஸ்டாலின்
⭐சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிப்பு.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
🏀 ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
இதில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
Today's Headlines
⭐Egmore Railway Station gets a new look
⭐ The Central Government has announced. Import duty exemption on cotton has been extended for another 3 months.
⭐Tamil Nadu's exports severely affected by US tariff hike - M.K. Stalin
⭐The Central Government has announced the National Quality Assurance Award for 5 government medical colleges in Tamil Nadu. The colleges are in Chennai Omandurar, Tiruvallur, Tiruvannamalai, Theni, and Kanyakumari.
SPORTS NEWS
🏀World Badminton Championship: PV Sindhu wins in the 2nd round
🏀 ICC released the rankings for the best players in ODIs. In this, India's Shubman Gill retained the first place with 784 points
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி