School Morning Prayer Activities - 05.08.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2025

School Morning Prayer Activities - 05.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2025

திருக்குறள் 

குறள் 214: 


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 

செத்தாருள் வைக்கப் படும். 


விளக்க உரை: 


உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.


பழமொழி :

You reap what you sow.


நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடையாகப் பெறுவாய்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.


2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


அன்பில்லா வாழ்க்கை என்பது பூக்கள் அல்லது பழம் இல்லாத மரத்தை போன்றது.


* கலில் ஜிப்ரான்*


பொது அறிவு : 


01. நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்


Dr.அன்னிபெசன்ட் அம்மையார்

Dr.Annie Besant.


02. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன?


65 வயது


English words :


authentic – to understand that the given object or idea is real or genuine. மெய்யானதாக அல்லது போலியல்லாததாக அறியப்பட்ட


Grammar Tips: 


 Why a university but not an university?


The word "university" is pronounced with a "yoo" sound at the beginning, which is a consonant sound, rather than a vowel sound like "oo" in "umbrella".


அறிவியல் களஞ்சியம் :


 1543-ஆம் ஆண்டில் வெசலியஸ் மனித உடலின் அமைப்புப் பற்றிய மிக முக்கியமான நூலான டி யுமானி கார்போரிஸ் வெப்ரிகா (De Humani Corporis Fabrica) என்பதனை வெளியிட்டார். உயிரியல் ஓர் அறிவியலாக வளர்வதற்கான முன்னறிவிப்பைத் தெரிவித்த இந்த நூல், தசைகளின் பிரிவுகளுக்கான டைட்டியனின் (titian) மாணவர் ஜோன் ஸ்டீபன் வேன்கால்கார் (Jan Stephen van calcar) என்பவரால் வரையப்பட்ட வரைபடங்களைக் கொண்டுள்ளது.


ஆகஸ்ட் 05


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 


நீதிக்கதை


 வாய்மையே வெல்லும்


ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது. 


தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார். 


பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய் 


உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான். 


மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை. 


பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான். 


நீதி :


அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும்.


இன்றைய செய்திகள் - 05.08.2025


⭐மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மு.க.ஸ்டாலின் பெருமிதம்.


⭐தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


⭐ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மலானா-1 நீர்மின் திட்டத்தில் உள்ள காஃபர் அணை திடீரென இடிந்து விழுந்தது. மேலும் 383 சாலைகள் மூடப்பட்டு உள்ளன.


⭐இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அமைத்தது ஈரான்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்.


🏀லண்டன் ஓவல் டெஸ்டில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-2 என சமன் செய்தது.


Today's Headlines


⭐ Chief Minister MK Stalin has delivered a speech about Tamil Nadu leading in electric car production.


⭐ Chief Minister MK Stalin has announced 4 new projects for Thoothukudi and Nellai districts.


⭐In Himachal Pradesh, Kullu district, 383 roads closed, and  the Kafar Dam of the Malana-1 Hydropower project collapsed due to heavy rains.


⭐Iran forms the Supreme National Security Council (SNSC) after the Israeli attack.


 SPORTS NEWS 


 🏀Pakistan beats West Indies to clinch T20 series.


 🏀India recorded a thrilling Test victory at the London Oval and leveled the series 2-2


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி