School Morning Prayer Activities - 06.08.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2025

School Morning Prayer Activities - 06.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.08.2025

திருக்குறள் 

குறள் 161: 

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் 

தழுக்கா றிலாத இயல்பு.       


விளக்க உரை: 

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.


பழமொழி :

Every day is a new beginning. 


ஒவ்வொரு நாளும் ஒரு புதிய துவக்கம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.


2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


புதுமை படைக்கும் ஆற்றலே தலைவரையும் பின்பற்றுவோரையும் வேறுபடுத்தி காட்டுகிறது.


     ஸ்டீவ் ஜாப்ஸ்


பொது அறிவு : 


01.உலகின் மிக நீண்ட எல்லை கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ளது?


கனடா மற்றும் அமெரிக்க

ஐக்கிய நாடுகள்

Canada and United states of America


02. உயிரற்ற குளிர் பாலைவனம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?


செவ்வாய் (Mars)


English words :


genuine – real; true. மெய்யான,போலியல்லாத


Grammar Tips: 


 Identifying silent letter patterns. 


b" is silent after "m": 


The "b" is usually silent (e.g., "comb", "thumb", "climb"). 


gh" after a vowel: 


The "gh" is often silent after a vowel (e.g., "thought", "though", "night").


அறிவியல் களஞ்சியம் :


 வெசலியஸ் ஸ்பெயின் நாட்டு மாமன்னர் ஐந்தாம் சார்லஸுக்கும் (Emperor Charles v) அவர் மகன் அரசர் இரண்டாம் பிலிப்புக்கும் (King Philip II) அரண்மனை மருந்தியல் நிபுணராக இருந்தார். மனித உடலைக் கூறு கூறாக்கிப் பகுத்தாய்வதற்காக (dissections) உடல்களை வலிந்து பற்றிக் கேள்விமுறைத் தேர்வு ஆய்வு செய்ததால் அவருடைய புகழ். அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியாமல் பழிக்கப்பட்டுக் கொல்லுமாறு ஆணைக்குட்படுத்தியது


ஆகஸ்ட் 06


சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.


உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.


1928 -ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலைக் காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.


நீதிக்கதை


 கைமேல் பலன் கிடைத்தது


அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 


ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 


சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.


இன்றைய செய்திகள் - 06.08.2025


⭐கிளாம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் 3 மாடிகளுடன் காவல் நிலையம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்


⭐அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறையால் இந்தியாவின் ஆடை தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது


⭐டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀இந்தியாவும் இங்கிலாந்தும்  5வது டெஸ்டில் சமநிலையில் உள்ளன: ஓவலில் வரலாறு படைக்கப்பட்டது.


🏀இந்திய ஆண்கள் கால்பந்துக்கான புதிய மேலாளராக காலித் ஜமீல் பொறுப்பேற்றார்


Today's Headlines


⭐ Chief Minister MK Stalin has inaugurated the Kilambakkam Police Station, which has three floors and is worth Rs. 18 crore.


⭐  Rajya Sabha Resolution passed about the decision to extend President's rule in Manipur state 


⭐New US tax regime threatens to put 2 million people jobless in India's garment sector  


⭐Tata Group-owned Jaguar Land Rover in Britain appoints Tamil P.B. Balaji as the first Indian CEO.


 SPORTS NEWS 


🏀 India and England draw in 5th Test: History made at The Oval stadium.


🏀New manager for Indian men's football: Khalid Jameel took charge.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி