தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ் .சி உள்ளிட்ட மற்ற பிரிவினர் தேர்ச்சி பெற 82 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இது இட ஒதுக்கீடு பிரிவினருக்கு கூடுதல் மனச்சுமை தருகிறது.
ஆனால் ஆந்திரா,தெலுங்கானா,
ஒடிசா,பீகார்,நாகலாந்து,
சத்தீஸ்கர் போன்ற பெரும்பாலான மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 90 ஆகவும் BC/MBC/SC/ST/DNC/PWD ஆகிய இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆகவும் உள்ளது..
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும பத்தாண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைத்தது ஒரு வகை ஆறுதல் கொடுத்தாலும் எஸ்.சி உள்ளிட்ட பிற இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் குறைக்கப்படவில்லை.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு அனைத்து வகையான இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் சீராக மதிப்பெண் குறைக்காமல் எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே மதிப்பெண்ணை குறைத்து இருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் பணி பெறுவதற்கான தேர்வு அல்ல. இது ஆசிரியர் என்பதற்கான தகுதியை குறிக்கும் தேர்வு மட்டுமே.
தமிழ்நாட்டில் அரசு ஆசிரியராக பணி நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டிய சூழல் உள்ளது.
முதலாவது நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் எஸ்டி பிரிவினருக்கு மட்டும் குறைக்கப்படாமல் எஸ்.சி உட்பட பிற இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் 75 ஆக குறைத்து
கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் தமிழ்நாடு அரசு அரசு பணி அல்லாத வெறும் தகுதியை மட்டும் தீர்மானிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை ஆந்திரா ஒடிசா தெலுங்கானா பீகார் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் BC/MBC/SC/DNC/PWD உள்ளிட்ட பிற வகை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆக குறைத்து தமிழகத்திலும் சமூகநீதி, சம உரிமை கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பதே ஆண்டுதோறும் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான தேவர்களின் பத்தாண்டு கால கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி