விஜயதசமி (02.10.2025) அன்று மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் பார்வை ( 1 ) -ல் கண்டுள்ள 2025-26 ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டியில் தெரிவித்துள்ளபடி 26.09.2025 அன்றுடன் காலாண்டு தேர்வுகள் முடிந்து இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு . 27.09.2025 அன்று முதல் தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது . மேலும் , 06.10.2025 திங்கள் அன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன என அறிவிக்கப்படுகிறது . மேலும் விஜயதசமி ( 02.10.2025 ) அன்று மாணவர் சேர்க்கைப் பணிகளை அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் எடுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி