தீபாவளிக்கு 2500க்கு மேல் ஆடைகள் எடுத்தால் கூடுதல் GSTயா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2025

தீபாவளிக்கு 2500க்கு மேல் ஆடைகள் எடுத்தால் கூடுதல் GSTயா?

 

தீபாவளிக்கு 2500க்கு மேல் ஆடைகள் எடுத்தால் கூடுதல் GSTயா?


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


~தீபாவளிக்குத் துணிகள் வாங்கும் போது ரூ.2,500/-க்கு மேல் Bill வந்தால் 18% GST எனவே, எவ்வளவு அதிகமாக Bill வந்தாலும் 2500க்கு மேல் Bill வராதபடி பிரித்துப் பிரித்து Bill போடுங்கள் 5% தான் GST வரும்~ என்று ஒரு நல்ல உள்ளம் பகிர்ந்த பதிவுதான் தற்போதைய Share of the Screen.


உண்மை என்ன. . . . . ? பார்க்கலாம் வாங்க.


GST எனும் Goods & Services Tax குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் அவற்றின் தன்மை & விலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.


ஆடை வகைகளைப் பொறுத்தவரை Rs.2,500/- வரை விலையுள்ளவை Lower Value Clothing என்றும் அதற்கு மேல் விலையுள்ளவை Higher Value Clothing என்றும் பிரித்து GST நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 22.09.2025 முதல்,


Lower Value Clothing : 5%


Higher Value Clothing : 18%


என்று GST மறு வரையறை செய்யப்பட்டுள்ளது.


உதாரணமாக,

* சட்டை Rs.1000/- & சேலை Rs.2600/- எனில், சட்டைக்கு 5%ம் சேலைக்கு 18%ம் GST செலுத்த வேண்டும்.


* Rs.1000/- மதிப்புள்ள 4 சட்டைகள் என 4,000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினாலும் ஒவ்வொரு சட்டைக்கு 5% மட்டுமே GST செலுத்த வேண்டும்.


அதாவது, நீங்கள் வாங்கும் ஒரு தனித்த ஆடையின் விலையைப் பொறுத்தே அது Lower Value Clothingஆ? அல்லது Higher Value Clothingஆ? என்று பார்த்து அந்த ஆடைக்கான GST வசூலிக்கப்படும். நீங்கள் வாங்கும் மொத்த ஆடைகளையும் சேர்த்து அந்த மொத்தத் தொகைக்கென ஒரே GST விதிக்கப்படுவதில்லை.


எனவே, நீங்கள் பிரிச்சுப் பிரிச்சுப் பில் போட்டாலும் மொத்தமா பில் போட்டாலும் அவற்றிற்குண்டான GST மாறாப்போவதில்லை.


GST குறைவாக, (5%) Dress எடுக்க வேண்டுமென்றால், 2500 ரூபாய்க்குக் குறைவான விலையுள்ள Dressகளை மட்டும் வாங்குங்க.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி