6 முதல் 9 வகுப்பு வரையான திறன் முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் - பணிமனை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்து SCERT Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2025

6 முதல் 9 வகுப்பு வரையான திறன் முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் - பணிமனை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்து SCERT Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - மதிப்பீட்டுப் புலம் - 6 முதல் 9 வகுப்பு வரையான திறன் முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் - பணிமனை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் – 08.09.2025 முதல் 12.09.2025 அனுமதித்தல் - சார்ந்து SCERT Proceedings 

பார்வை 1 - ல் காணும் கடிதத்தின்படி , 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கியுள்ள திறன் மாணவர்களுக்கென முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா 1 மாதிரி வினாத்தாள் மற்றும் 2 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


எனவே , தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கும் பணிமனை 08.09.2025 முதல் 12.09.2025 முடிய ஐந்து ( 05 ) வேலை நாட்களில் நடத்திட ஆணை வழங்கப்படுகிறது . 08.09.2025 அன்று இதன்படி , இணைப்பு ( 1 ) ல் தெரிவிக்கப்பட்டுள்ள சார்ந்த ஆசிரியர்கள் முதல்வர்கள் நடைபெறும் பணிமனையில் கலந்துகொள்ள அறிவுறத்தப்படுகிறார்கள் . எனவே , சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவிக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது . மேலும் , திறன் முதல் பருவம் / காலாண்டுத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பக்கவடிவமைப்பு செய்யும் பணியினை 03 Layout பணியாளர்களைக் கொண்டு 10.09.2025 முதல் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி