உயர்கல்வி வழிகாட்டி பயிற்சித் திட்டம்: மாணவர் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2025

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சித் திட்டம்: மாணவர் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது. அந்த முகாம்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது.


அடுத்தகட்டமாக இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மாவட்டங்களில் ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின்படி மட்டுமே இனிவரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


எனவே, வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி