பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம்

 

பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக்​கோரி அரசு ஊழியர்​களும் ஆசிரியர்​களும் இன்று ஒரு​நாள் தற்​செயல் விடுப்பு போராட்​டத்​தில் ஈடு​பட உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம் துறை செயலர்களுக்கு சில விளக்கங்களை தெரிவித்துள்ளார்.


இதுதொடர்​பாக சிபிஎஸ் (பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டம்) ஒழிப்பு இயக்​கத்​தின் மாநில தலைமை ஒருங்​கிணைப்​பாளர்​கள் எஸ்​.ஜெய​ராஜ ராஜேஸ்​வரன், பி.பிரெட்​ரிக் எங்​கெல்​ஸ், மு.செல்​வகு​மார் ஆகியோர் கூட்​டாக வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது, திமுக தனது தேர்​தல் அறிக்​கை​யில் (எண் 309) அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என வாக்​குறுதி அளித்​தது.


ஆனால், ஆட்சி பொறுப்​பேற்று 4 ஆண்​டு​களுக்கு மேல் ஆகி​யும் திமுக அரசு இன்​னும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​த​வில்​லை. தமிழகத்​தை​விட நிதி வரு​வா​யில் பின்​தங்​கிய மேற்கு வங்​கம் உள்பட 5 மாநிலங்​களில் பழைய ஓய்​வூ​திய திட்​டமே தற்​போதும் அமலில் உள்​ளது. தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி, பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை கொள்​கைரீ​தி​யாக அமல்​படுத்​து​வதற்கு மாறாக தமிழக அரசு, அலு​வலர் குழுவை நியமித்​துள்​ளது.


தமிழக நிதித்​துறை​யின் விருப்​பத்​தையே அலு​வலர் குழு, அரசுக்கு அறிக்​கை​யாக வழங்​கும் என்​பது கடந்த கால அனுபவம். பழைய ஓய்​வூ​திய திட்ட கோரிக்​கையை வலி​யுறுத்தி 2026-ம் ஆண்டு ஜனவரி​யில் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடுபட திட்​ட​மிட்​டுள்​ளோம்.


அதற்கு முன்​த​யாரிப்​பாக செப்​.11-ம் தேதி (இன்​று) ஒரு​நாள் தற்​செயல் விடுப்பு போராட்​டம் நடை​பெறுகிறது. அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் தன் உணர்​வுடன் இந்த போராட்​டத்​தில் பங்​கேற்க வேண்​டும். தமிழக அரசும் தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை உடனே அமல்​படுத்த வேண்​டும் என்று வலி​யுறுத்​துகிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​யுள்​ளனர்​.


வரு​கைப்​ப​திவு விவரம்: இதற்​கிடையே, தமிழக அரசின் தலை​மைச் செயலர் ந.முரு​கானந்​தம் அனைத்து துறை​களின் செயலர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை: குறிப்​பிட்ட கோரிக்​கையை வலி​யுறுத்தி செப். 11-ம் தேதி அன்று ஒட்​டுமொத்​த​மாக தற்​செயல் விடுப்பு எடுக்க அரசு ஊழியர்​கள் திட்​ட​மிட்​டுள்​ளனர். தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்க அங்​கீ​கார விதி​முறை​யின்​படி, எந்த ஒரு சங்​க​மும் அதன் உறுப்​பினர்​களை ஒட்​டுமொத்​த​மாக தற்​செயல் விடுப்பு எடுக்​கச் சொல்ல முடி​யாது.


அனைத்து துறை​களின் செயலர்​களும் தங்​கள் அதி​காரத்​துக்கு உட்​பட்ட அரசு அலு​வல​கங்​களில் வியாழக்​கிழமை காலை 10.15 மணிக்​குள் ஊழியர் வரு​கைப்​ப​திவு விவரங்​களை தவறாமல் தெரிவிக்க வேண்​டும். அதன் நகலை மனிதவள மேலாண்​மைத் துறைக்கு மின்​னஞ்​சல் வாயி​லாக அனுப்ப வேண்​டும்.


அதே​போல் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களும் தங்​கள் நிர்​வாக வரம்​புக்கு உட்​பட்ட அரசு அலு​வல​கங்​களில் ஊழியர் வரு​கைப்​ப​திவு விவரங்​களை வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் அலு​வல​கம் வாயி​லாக அரசுக்கு தெரிவிக்க வேண்​டும். அதன் நகலை மனிதவள மேலாண்​மைத் துறைக்கு அனுப்ப வேண்​டும். இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி