பள்ளி காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு: விடுமுறை நாளை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2025

பள்ளி காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு: விடுமுறை நாளை தொடக்கம்

 

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் அரசு, அரசு உதவி மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் செப்​டம்​பரில் காலாண்டு தேர்வு நடத்​தப்​படு​கிறது.


இந்த கல்வி ஆண்​டுக்​கான காலாண்டு தேர்வு கடந்த செப். 10-ம் தேதி தொடங்கி நடந்து வரு​கிறது. இந்த தேர்​வு​கள் இன்​றுடன் (செப். 26) முடிவடைகின்​றன. சில வகுப்​பு​களுக்​கான தேர்​வு​கள் நேற்றே முடிந்​து​விட்​டன. இதையடுத்​து, மாணவர்​களுக்கு காலாண்டு விடு​முறை நாளை (செப்​.27) முதல் அக்​.5-ம் தேதி வரை வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த விடு​முறை​யில்​தான் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி ஆகியவை கொண்​டாடப்​படு​கின்​றன. இந்த விடு​முறை முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் அக்​. 6-ம் தேதி திறக்​கப்பட உள்​ளன.


இதற்​கிடையே, காலாண்டு விடு​முறை​யில் ஆசிரியர்​களை பணிக்கு வர வற்​புறுத்​து​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்​கள் சிலர் கூறிய​போது, ‘‘காலாண்டு விடு​முறை நாட்​களில் சில குறிப்​பிட்ட வகுப்​பு​களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்​டும் என மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர். இந்த முடிவை கைவிட்டு காலாண்டு தேர்வு விடு​முறையை முழு​மை​யாக எடுத்​துக் கொள்ள பள்​ளிக்​கல்​வித்​ துறை வழி​செய்​ய வேண்​டும்​’’ என்​றனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி