ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2025

ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

 

மத்​திய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். தமிழகத்​தில் கடைசி​யாக, கடந்த 2022-ம் ஆண்​டுக்​கான டெட் தேர்வு 2023 பிப்​ர​வரி​யில் நடத்​தப்​பட்​டது. 2023, 2024-ம் ஆண்​டு​களுக்​கான டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்​லை.


இந்​நிலை​யில், 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிட்​டது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு அன்​றைய தினமே தொடங்​கியது. இடைநிலை ஆசிரியர்​கள் டெட் முதல் தாள் தேர்​வுக்​கும் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் 2-ம் தாள் தேர்​வுக்​கும் விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். நவம்​பர் 15, 16-ம் தேதி​களில் தேர்​வு​கள் நடை​பெற உள்​ளன.


டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நாளை (செப்​.8) நிறைவடைகிறது. தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​பும் இடைநிலை ஆசிரியர்​களும், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​களும் https://trb.tn.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் நாளை மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்​கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்​பவர்​களும் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.


அரசுப் பள்ளி மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆசிரிய​ராக பணிபுரிய​வும், பதவி உயர்வு பெற​வும் டெட் தேர்​வில் தேர்ச்சி பெறு​வது கட்​டா​யம் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்து உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் தீர்ப்​பளித்​துள்​ளது. எனவே, ஆசிரியர்​கள் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வசதி​யாக கால அவகாசம் நீட்​டிக்​கப்​படலாம்​ என்று தெரிகிறது.

1 comment:

  1. அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் நிரப்பி வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்தவர்கள் தெருவில் நிற்கும் நிலையில் வைத்து விட்டார்கள்! எங்கும் தற்காலிக நியமனம் மட்டுமே! கேட்டால் நிதி இல்லை! ஆனால் கட்சி நிகழ்ச்சி ஒவ்வொன்றிற்கும் கோடி கோடியாக செலவளிக்கப் படுவதை படித்தவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்! வேலைவாய்ப்பு அளிக்காத இந்த கூட்டணிகளை படித்து விட்டு வேலை தேடுவோர் புறக்கணிப்பார்கள் இந்த தேர்தலில்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி