ஆசிரியர்களின் தகுதியை ஒரு தேர்வு முடிவு செய்யுமா? இந்த வார ஆனந்தவிகடனில்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2025

ஆசிரியர்களின் தகுதியை ஒரு தேர்வு முடிவு செய்யுமா? இந்த வார ஆனந்தவிகடனில்..

 ஆசிரியர்களின் தகுதியை ஒரு தேர்வு முடிவு செய்யுமா?

வெ.நீலகண்டன் எழுதிய உண்மைக்கு நெருக்கமான கட்டுரை


இந்த வார ஆனந்தவிகடனில்..


*ஆசிரியர்களின் தகுதியை ஒரு தேர்வு முடிவு செய்யுமா?*

*ஆனந்த விகடன் கட்டுரை*


பொது இடத்தில் ஒருவன் சிறுநீர் கழித்தால் எந்த வாத்தியார்கிட்டட என்றுதான் திட்ட ஆரம்பிப்பார்கள். அந்த அளவுக்கு ஒருவரின் ஒழுக்கத்தை வடிவமைப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ஆசிரியர்கள் ஆசிரியர் பணியென்பது 9 - 5 மணி வேலையல்ல ஆசிரியர்கள் என்றென்றும் ஆசிரியர்கள்தான். சாதித்தவர்களோ, சாதிக்காதவர்களோ அந்தனை பேருக்கும் கதையிருக்கிறது தங்கள் ஆசிரியர்கள் பற்றி, 'பொறுப்பற்றவர்களாகிவிட்டார்கள், அப்டேட் ஆகவில்லை', 'மாணவர்களுடனான உறவு சீர்குலைந்துவிட்டது என்றெல்லாம் சமீப காலங்களில் ஆசிரியர் சமூகத்தின்மீது குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னும் அதே அர்ப்பணிப்போடுதான் இருக்கிறார்கள். இன்றைக்கும் பல நூறு அரசுப்பள்ளி மாணவர்கள், இதுவரை தொடமுடியாமல் இருந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கெல்லாம் செல்கிறார்கள். அதன் பின்னணியில் இருப்பது ஆசிரியர்களின் உழைப்புதான். தற்போது அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ள தகுதித்தேர்வு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் 2012 முதல் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் (NCTE), இனி பணியில் இணையும் அத்தனை ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுதித் தேர்ச்சிபெற வேண்டும்' என்று அறிவித்தது, பணி உயர்வு பெறவும் தகுதித்தேர்வைக் கட்டாயப்படுத்தியது. அதன்படி, 2012-க்குப் பிறகு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டார்கள். பணி உயர்விலும்  அது கடைபிடிக்கப்பட்டது


இந்தச் சூழலில் தகுதித்தேர்வைக் கேள்விக்குள்ளாக்கி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குகளைத் தாக்கல் செய்தார்கள். அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'கல்வி உரிமைச் சட்டம் வந்தபிறகு என்ற வரம்பை மாற்றி, பணிபுரியும் அத்தனை ஆசிரியர்களுமே தகுதித்தேர்வை எழுதித் தேர்ச்சி பெறவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், 2 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்' என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ள நீதிமன்றம், பணி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்களித்து, கருணை காட்டியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1.75 ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டி நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.


ஆசிரியர்கள் அப்டேட் ஆகவேண்டும். தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் நியதி. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், 30 வருடங்களுக்கு மேல் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருபவர்களுக்கு ஒரு தகுதித்தேர்வை வைத்து, அதில் நேர்ச்சி பெறாதவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று அழுத்தம் கொடுப்பது இயற்கை நீதிக்கு முரணானது.


அது கடைப்பிடிக்கப்பட்டது.


*உண்மையில் ஆசிரியருக்கான தகுதிகள் என்ன?*


பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வைப்பது மட்டுமல்ல. மாணவர்களின் சமூக, பொருளாதார, குடும்பப் பின்புலம் அறிந்து, அவர்களின் நிறைகுறைகளை உள்வாங்கி, தனித்திறன்களை அறிந்து, ஒழுக்க நெறிமுறைகளைப் போதித்து, எதிர்காலத்துக்கான பாதையை அமைத்துத் தருவதும் ஆசிரியர்களின் பணிதான் நன்கு பாடம் நடத்துபவராக மட்டுமன்றி, மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவராக, முன்மாதிரியாக, ஆக்கத்திறன் மிக்கவராக, பிடித்தவராக, பேசவிட்டுக் கேட்பவராக, ஆளுமைப் பண்புகளை வளர்த்தெடுப்பவராக இருப்பதும் ஆசிரியரின் தகுதிகள்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு இவற்றையெல்லாம் சோதிக்கவில்லை.


நினைவாற்றலைச் சோதிப்பதைத் தவிர அதில் வேறெதுவும் இல்லை வகுப்பறையில் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிவது எப்படி, அவர்களுக்கு உதவுவது எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. வெறும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள். அதில் ஆசிரியர்களின் தகுதியை, மாணவர்கள்மீதான ஈடுபாட்டை உளவியலை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி.


"பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித்தர்வுத் தாள்-2 எழுத வேண்டும். தமிழ், ஆங்கிலம். விருப்பப்பாடம், அறிவியல் பிரிவு என்றால் அறிவியல் மற்றும் விருப்பப் பாடம், குழந்தை உளவியல், பொது அறிவு ஆகிய இந்தத் தேர்வு நடக்கும் எங்கள் தமிழ் ஆசிரியருக்கு 53 வயது அவரளவுக்குத் தமிழில் இலக்கிய, இலக்கணப் பாடங்களை நடத்தமுடியாது. ஆனால் இந்தத் தேர்வுக்கு மேலே சொன்ன மொத்தப் பாடங்களையும் படிக்க வேண்டும். அதுவும் 6-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை.


எங்கள் கணித ஆசிரியர் 15 ஆண்டுகளாக பாடம் நடத்திவருகிறார். மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் அவர், ஆங்கிலம், தமிழ், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை மற்ற பாடப்புத்தங்களையும் அவர் படிக்க வேண்டும்.


மாணவர்களின் தேர்வுமுறையையே மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்களும் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது கல்விச்சூழலைச் சிதைத்துவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது' என்கிறார், அரசுப்பள்ளி ஆசிரியை மைதிலி கஸ்தூரிரங்கள்.


பிளஸ்டூ முடித்த ஒருவர் ஆசிரியராக வேண்டும் என்றால், அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியா பயிற்சி நிறுவனத்தில் பட்டயப் படிப்பைப் படித்துத் தேர்ச்சி பெறவேண்டும். அதன்பிறகு 40 நாள்கள் வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திப் பயிற்சி பெறவேண்டும். அதிலும் போதிய மதிப்பெண் பெறவேண்டும் அதன்பிறகே. தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியராகும் தகுதியைப் பெறுவார்கள்.


இதுதான் பட்டதாரி ஆசிரியர்களுக்கும். கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்பு முடித்து பி. எட் படித்துத் தேர்ச்சி பெற்று, பள்ளியில் பணியாற்றிப் பயிற்சி பெற்ற பிறகே ஆசிரியராகத் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆசிரியர் பட்டயப் படிப்பும், பி.எட் படிப்பும் ஆசிரியர் பணிக்கான தகுதியா, இல்லையா? அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் பட்டத்தையும் பட்டயங்களையும் வழங்கத் தகுதி பெற்றவையா, இல்லையா?


ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள் அவர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக ஆட்சிப் பணியாளர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த மாணவர்களெல்லாம் தகுதியானவர்கள், அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களின் தகுதியைச் சோதிக்க ஒரு தேர்வு வேடிக்கையாக இல்லையா?


தொழில்நுட்பம் வந்தாலும் அதை வெல்வதற்கான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தருவதல்ல, எந்தன் ஆசிரியப்பணி என்பது நிறைவுறாப் பணி விசாலமான அறிவையும் நம்பிக்கையையும் திறனையும் கற்றுத்தருவது. ஆசிரியர்கள் தினந்தோறும் கற்கவேண்டும். மாணவர்களைவிட ஒருபடி மேலே கற்கவேண்டும். அப்படிக் கற்காவிட்டால் ஒருநாள்கூட ஆசிரியராக ஒருவரால் வேலை செய்யமுடியாது. அதுதான் யதார்த்தம்.


"இப்போதும் ஆசிரியர்களுக்கு இன்சர்வீஸ் பயிற்சிகள் சிறப்பாகவே தரப்படுகின்றன. உதாரணத்துக்கு, போக்ஸோ சட்டம் பற்றி ஒரு பாடத்தை இணையத்தில் அனுப்பிவிடுவார்கள். படித்து, வீடியோ பார்த்து அவற்றை ஆசிரியர்கள் சுற்றுக்கொள்வார்கள். பிறகு அதுபற்றி இணையவழியிலேயே ஒரு தேர்வும் நடத்தப்படும். இதுமாதிரி ஏகப்பட்ட தேர்வுகள் எனக்குத்தெரிந்து எல்லா ஆசிரியர்களுமே இந்தப் பயிற்சியில் சீரியஸாகப் பங்கேற்கிறார்கள். இதைப்போல சப்ஜெக்ட்டிலும் ஆசிரியர்களுடைய திறனை சோதிக்கலாம் பின்தங்கியிருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியை அதிகப்படுத்தலாம். தேறவே மாட்டார்கள் என்று தெரியவந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்.


'திறன்' என்று ஒரு திட்டம் பள்ளிகளில் நடந்து வருகிறது. அடிப்படைத் திறன் குறைவாக இருக்கும் மாணவர்களைத் தனியாக எடுத்து அவர்களுக்குத் தனியாகப் பாடம் நடத்துகிறோம். கிட்டத்தட்ட இரண்டு வகுப்பறைகள். அவைதவிர, தேசியத் திறனறித் தேர்வுகள், மன்றப் போட்டிகள், கலைத்திருவிழாக்களுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம். இத்தனை பணிகளுக்கு மத்தியில் தேர்வுக்கும் நாங்கள் தயாராக வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று ஆசிரியை மைதிலி கஸ்தூரிரங்கள் எழுப்புகிற கேள்வி மிக நியாயமானது.


இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொருளாதார, சமூகச் சூழல் நிலவுகிறது. வளர்ச்சியிலும் பெரிய ஆயிரக்கணக்கான மேடுபள்ளங்கள். கல்வியில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறுதான் முடிவுகளையும் கொள்கைகளையும் வகுக்கமுடியும் சட்டங்களை உருவாக்கும் போது, அவற்றின பொதுத்தன்மைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அதிலிருக்கும் அத்தனை அம்சங்களையும் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்பது வளர்ந்த மாநிலங்களை பின்னோக்கி இழுக்கும் வேலை தேசியக் கல்விக்கொள்கை போன்ற பல கொள்கைகள் அதைத்தான் செய்கின்றன


மாநிலங்களில் கல்வியியல் பட்டம். பட்டயங்கள் பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவுக்கு இல்லை அதனால் அங்கு இளநிலைப் பட்டம் பெற்றவர்களைக்கூட இணையாசிரியர் [Para-teacher) என்ற பெயரில் ஆசிரியர்களாக நியமித்தார்கள் கல்வி உரிமைச் சட்டம் வந்தபிறகு இவர் தகுதிப்படுத்துவதற்கு தகுதித்தேர்வை நடத்துங்கள் என்றுதான் தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் சொல்லிலிருக்க வேண்டும் ஆனால் இந்தியாவிலிருக்கும் எல்லா ஆசிரியர்கள் தலையிலும் அந்தத் தேர்வை சுமத்தி விட்டார்கள்


2010-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டபோதே மாநில அரசுகள் ஆட்சேபணை தெரிவித்திருக்க வேண்டும். ஆசிரியர் சங்கங்கள்கூட வாய்மூடி மெளனம் காத்தன. இனிமேல் வரும் ஆசிரியர்களுக்குத் தானே பிரச்னை என்று நினைத்தார்கள் இன்று எல்லோரின் கழுத்திற்கும் கத்தி வந்துவிட்டது


"கொரோனாவுக்குப் பிறகு பள்ளிச்சூழல் மாறியிருக்கிறது. குழந்தைகளின் இயல்பிலும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. பாடம் நடத்துவதற்கு இணையாக வேறு சில கடமைகள், பொறுப்புகள் உருவாகியுள்ளன. மாணவர்களின் மீது கூடுதல் கவனம செலுத்த வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒரு தகுதித்தேர்வை ஆசிரியர்கள் மேல் திணிக்கக்கூடாது ஏற்கெனவே ஏரானமான பயிற்சிகள் ஆசிரியாகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் தொடர்ச்சியான செயல்பாடுகள் இல்லை. அதனால் அந்தப் பயிற்சிகள் பெரிய அளவில். பயனளிக்கவில்லை அரசு பயிற்சி முறைகளை மாற்ற வேண்டும் 


ஆசிரியர்களில் பணிச்சுமை குறித்தும் இந்த நேரத்தில் விவாதிக்க வேண்டும் கற்பித்தல் தாண்டி பிற பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்ய வேண்டும். பல ஆண்டுகளாகப் பணி செய்து கொண்டிருப்பவர்களை, தேர்வில் தேரச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யுங்கள் என்று சொல்வது சிறிதும் நியாயமற்றது"என்கிறார் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா


*தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?*


ஆசிரியர்களுக்கு கைகொடுக்க நினைத்தால், எங்கள் ஆசிரியர்களின் தகுதி மீது எந்தப் புகாரும் எழவில்லை அவர்கள் கற்பித்தல் திறன் சிறப்பாகவே உள்ளது தொழில்நுட்ப மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நாங்கள் எங்கள் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்குகிறோம் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களை மதிப்பீடு செய்கிறோம். அவர்களைத் தகுதிப்படுத்து பொறுப்பை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்' என உடனடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்


மத்திய, மாநில அரசுகளிடம் கல்விசார் ஏராளமான நிறுவனங்கள் இருக்கின்றன அவர்களெல்லாம் ஒருங்கிணைந்து செயற்கை துண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி கற்பித்தல் முறைகள் குறித்த பயிற்சித் திட்டம் உருவாக்க வேண்டும். அந்தப் பயிற்சிகளை ஒரு ஆசிரியர் உள்வாங்கத் தவறுகிறார். அவரால் மாணவர்களுக்கு சரிவரக் கற்பிக்க முடியவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பலாம். அல்லது கற்பித்தல் சார்ந்த வேறு பணிகளுக்குத் திருப்பலாம். வகுப்பறைக கண்காணிக்க அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் தங்கள் கடமையை சரியாகச் செய்யட்டும்.


ஆயிரம் புகார்கள் சொல்லலாம் ஆனால் நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ஆசிரியர்கள்தான் சமூகத்தில் அடித்தளத்தில் நிற்பவர்கள், தண இந்தியாவை அவர்களதான் கட்டியெழுப்ப போகிறார்கள் மதிப்பு மிகுந்த பணியான இந்த ஆசிரியர் பணியை தேர்வு மூலம் கேலிக்கூத்தாக்குவது நியாயமல்ல.





2 comments:

  1. திறமையான ஆசிரியர் ௭ன்றால் எந்த ஒ௫ தேர்வையும் ௭ளிதில் வெற்றி பெறலாம் ஏன் இந்த பயம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி