GST 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? - பட்டியல் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2025

GST 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? - பட்டியல் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

தமிழகத்​தில் புதிய டிராக்​டர் வாங்​கு​வோர் ரூ.42 ஆயிரம் வரை சேமிக்​கலாம் எனவும் ரூ.40 ஆயிரத்​துக்கு டிவி வாங்​கு​வோர் ரூ.4 ஆயிரம் வரை சேமிக்​கலாம் என்​றும் ஜிஎஸ்டி 2.0 சீர்த்​திருத்​தம் தெரிவிக்​கிறது. இந்​தியா முழு​வதும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் என்​பது வரும் 22-ம் தேதி அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதனால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைய இருக்​கின்​றன. இதையொட்டி தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 புத்​தகத்தை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், சென்​னை​யில் நேற்று வெளி​யிட்​டார்.


அப்​போது அவர் கூறும்​போது, நீண்ட நாள் கோரிக்​கை​யான ஜிஎஸ்டி குறைப்பு என்​பது ஒவ்​வொரு குடிமக​னின் வெற்​றி​யாகும். தீபாவளிக்கு முன்பு இதை அமல்​படுத்த வேண்​டும் என பிரதமர் விரும்​பி​னார். ஆனால் நவராத்​திரிக்கு முன்பே வரி​குறைப்பு அமலாகும் என்​றார். ஜிஎஸ்டி 2.0 புத்​தகத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஜிஎஸ்டி வரி​குறைப்​பில் டிராக்​டர்​களுக்​கான ஜிஎஸ்டி என்​பது 12 சதவீதத்​தில் இருந்து 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.


இதன்மூலம், ரூ.6 லட்​சம் மதிப்​புள்ள புதிய டிராக்​டருக்கு ரூ.42 ஆயிரம் வரை சேமிக்க முடி​யும். டிராக்​டர் டயர்​கள் மற்​றும் உதிரி பாகங்​களுக்​கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீத​மாக குறைக்கப்​பட்​டுள்​ளது. இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்​புள்ள டிராக்​டர் டயர்களின் விலை​யில் ரூ.6,500 குறைந்துள்​ளது. காஞ்​சிபுரம் பட்​டு, மதுரை சுங்​குடி துணி​களுக்கு 12 சதவீதத்​தில் இருந்து 5 சதவீத​மாக ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது.


அதே​போல் தஞ்​சாவூர் பொம்​மை​கள், காஞ்​சிபுரம் கைவினை பைகள், பவானி ஜமக்​காளம், சுவாமிமலை வெண்கல சின்​னங்​கள், மணப்​பாறை முறுக்​கு, தென்னை நார் பொருட்​கள் ஆகிய​வற்​றுக்​கும் 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டிருக்​கிறது. ரூ.1 லட்​சம் மதிப்​பிலான இருசக்கர வாக​னங்​களுக்கு ரூ.10 ஆயிரம் வரை​யும், ரூ.6 லட்​சம் மதிப்​பிலான சிறிய ரக கார்​களுக்கு ரூ.60 ஆயிரம் வரை​யும், ரூ.3 லட்​சம் மதிப்​பிலான ஆட்​டோக்​களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது.


மேலும் பரோட்​டா, ரொட்​டி, சப்​பாத்தி போன்ற உணவு பொருட்​களுக்கு வரி​விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ள​தால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறை​யும் என்​றும் எதிர்​பார்க்​கலாம். தமிழக பள்​ளி​களில் பயின்று வரும் 1.5 கோடி குழந்​தைகள் பயனடை​யும் வகை​யில் குறிப்​பேடு​கள், ரப்​பர், பென்​சில், கிரெ​யான்ஸ் போன்​றவற்​றில் ரூ.850 வரை பெற்​றோ​ரால் இனி சேமிக்க முடி​யும். அதே​போல் ரூ.1,000 மதிப்​பிலான மருந்​துகளுக்கு ரூ.100 வரை ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக புற்​று​நோய்​களுக்​கான மருந்​துகளுக்கு ரூ.1200 வரை விலை குறை​கிறது. கட்​டு​மானத் தொழில்​களில் ரூ.50 ஆயிரம் மதிப்​பிலான சிமென்ட் கொள்​முதலில் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்கலாம்.


தமிழகத்​தில் பிரதமரின் வீட்​டு​வசதி திட்​டத்​தின்​கீழ் கட்​டப்​படும் வீடு​களுக்கு இது நேரடி​யாக பயனளிக்​கும். குறிப்​பாக ரூ.40 ஆயிரம் மதிப்​பிலான தொலைக்​காட்சி பெட்​டிகளுக்கு ரூ.4 ஆயிரம் வரை​யும், ரூ.35 ஆயிரம் மதிப்​பிலான ஏசி-​களுக்கு ரூ.3,500 வரை​யும் ரூ.60 ஆயிரம் மதிப்​பிலான ஹீட்​டருக்கு ரூ.7 ஆயிரம்​ வரை​யிலும்​ விலை குறை​யும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி