திருக்குறள்
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
விளக்க உரை:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
பழமொழி :
Knowledge is a light that never fades.
அறிவு என்னும் ஒளி ஒருபோதும் மங்காது.
இரண்டொழுக்க பண்புகள் :
1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.
2 இயற்கை சமநிலை காப்பேன்.
பொன்மொழி :
மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும்;, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
– சாலமோன் ஞானி
பொது அறிவு :
01.அரசியல் தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பிளேட்டோ - Plato
02. தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 12 -January 12
English words :
show off- boast, தன் பெருமையை மற்றவர்களுக்கு காட்டிக் கொள்ளுதல்
Grammar Tips:
Modal verbs contd
The nine most common modal verbs are can, could, may, might, shall, should, will, would, and must. They are followed by a base form of another verb.
Ex: can play, shall wait, might have slept, should take, will come, would open, may eat, can look, must follow
அறிவியல் களஞ்சியம் :
மழைக்காலங்களில் இடி, மின்னலால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கு இடிதாங்கியை கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்ளின். உயரமான கட்டடங்களின் உச்சியில், கூர்முனை உள்ள ஒரு தடித்த கம்பி பொருத்தப்படுகிறது. அதுதான் இடிதாங்கி. அந்தக் கம்பி பூமி வரை இழுக்கப்பட்டு பூமியினுள் புதைக்கப்படும். இதற்கு எர்த்திங் என பெயர். இப்படி செய்வதன் மூலம் கட்டடத்தின் மேல் இடி, மின்னல் விழும்போது அதிலுள்ள மின்சாரம், இடிதாங்கி மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கட்டடம் பாதிப்பது தடுக்கப்படுகிறது.
செப்டம்பர் 12
ஜெசி ஓவென்ஸ் அவர்களின் பிறந்தநாள்
ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.
நீதிக்கதை
அதிசயக்குதிரை
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டமளித்து வளர்த்தனர்.
அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும் மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சாணாக இருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிராமனோ என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை என்றான். குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன் என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத் தலைவருக்கு நீண்ட தாடியுண்டு. குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப்படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
இன்றைய செய்திகள் - 12.09.2025
⭐TET-ல் கட்டாய தேர்ச்சி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
⭐ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம்
அமைக்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
⭐இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀உலக கோப்பைக்கான அனைத்து நடுவர்களும் பெண்களாக செயலாற்றுவது கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை என ஐசிசி அறிவிப்பு
🏀இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகானக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
Today's Headlines
⭐Tamil Nadu government decides to file a review petition against the Supreme Court verdict regarding compulsory TET, Minister Anbil Mahesh announced.
⭐International airport to be set up on 2,000 acres in Hosur- Chief Minister M.K. Stalin announced.
⭐Russia should immediately stop recruiting Indians into its army - India insists.
*SPORTS NEWS*
🏀All umpires for the World Cup will be women: ICC announces for the first time in cricket history.
🏀India scored 60 runs in 4.3 overs and won by 9 wickets. Kuldeep Yadav was selected as the man of the match in this match.
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி