School Morning Prayer Activities - 16.09.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2025

School Morning Prayer Activities - 16.09.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2025

திருக்குறள் 

குறள் 546 – 


வேலன்று வென்றி தருவது மன்னவன் 

கோலதூஉங் கோடா தெனின். 


  விளக்கம்


ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அல்ல, மாறாக அவனுடைய நேர்மையான, கோணாத செங்கோல்தான்


பழமொழி :

Knowledge without action is waste.    


செயல் இல்லாத அறிவு வீணாகும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.


பொன்மொழி :


ஒரு புன்னகையால் அதிசயத்தை நிகழ்த்த முடியும். எனவே, புன்னகைத்து உங்கள் செயல்களை நிறைவேற்றுங்கள். -ரால்ப் மார்ஸ்டன்


பொது அறிவு : 


01.அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலம் எது?


              உத்திர பிரதேசம் 


 Uttar Pradesh 


02.நுண் உயிரியலின் தந்தை யார்?


  ஆண்டன்வான்  லூவான் ஹாக்


Antonie van Leeuwen hoek 


English words :


shut up – stop talking, பேசுவதை நிறுத்து


Grammar Tips: 


 "Generalization rule"

Wrong spellings of 'ar'(அர்) sound 

How to differentiate between ir, ur, er. All have the same sounds. 

er will come at the last as in

Paper, Cooler 

Ur mostly in the middle of the word like 

Hurt, curd, curl, burning 

Ir comes before 

m,d,t or th 

Flirt, birth, third, squirm.


அறிவியல் களஞ்சியம் :


 புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.


செப்டம்பர் 16


ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.  1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.


கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்


கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4] கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். ரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[7] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.


நீதிக்கதை


 ஒரு ஊரில் ஒரு வறிய தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்கு உண்ண உணவு உடுத்த உடை இல்லா நிலை. அதிக வேதனை அடைந்தனர். இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.


அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.


வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.


ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.


உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.


நீதி: ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்


இன்றைய செய்திகள் - 16.09.2025


⭐பி.எட்., எம்.எட் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு


⭐வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்ஜினீயர்கள்- பிரதமர் மோடி வாழ்த்து


⭐பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது


 ⭐உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.


🏀விளையாட்டுச் செய்திகள்


🏀 2025 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன 


🏀 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் - ஏமன் மற்றும் இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.


Today's Headlines


⭐ Students can apply for B.Ed., M.Ed. courses till 30th September. 


 ⭐PM Modi has congratulated the engineers who play a key role in creating the developed India. 


⭐The "Loving Hands" scheme was announced by the Tamil Nadu government to embrace and continue to protect children who are unable to be cared for by their parents .


⭐ CM ,MK Stalin has presented laptops to students who are admitted to higher educational institutions through the efforts of the Tamil Nadu government. 


 *SPORTS NEWS*


🏀 The 2025 Asia Cup T20 cricket matches are being held in Dubai 


🏀 The UAE - Yemen and Sri Lanka - Hong Kong teams will clash today in the 2025 Asia Cup cricket series.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி