திருக்குறள்
குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
விளக்க உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
பழமொழி :
Mistakes are proof that you are trying.
தவறுகளை நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்பதற்கான சான்று.
இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.
2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
பொன்மொழி :
உங்கள் உடல்நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ அதுபோல நேர்மையையும் கடைபிடியுங்கள் - ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
01.வரலாற்று புகழ் பெற்ற சார்மினார் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
தெலுங்கானா-Telangana
02. காவிரி ஆறு எந்த இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது?
பூம்புகார் மயிலாடுதுறை மாவட்டம்
Poompuhar - Mayiladuthurai district
English words :
take back – retraction or withdraw/ திரும்ப பெறுதல் அல்லது திரும்ப எடுத்துக் கொள்ளுதல்
Grammar Tips:
Plural rule
If the noun ends with s,x,z,ch,sh,ss,zz add es to the noun
Bus– buses
Box–boxes
Match –matches
Bush–bushes
Mess- messes
If the noun ends with f or fe add ves to the noun
Leaf –leaves
Knife –knives
அறிவியல் களஞ்சியம் :
இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு பொது மக்கள் நீரின் முக்கியம், அதை பாதுகாக்காவிட்டால் ஏற்படக்கூடிய மோசமான பின் விளைவுகள் குறித்து ஒரு விழிப்புணர்வு அடைய வேண்டும்
செப்டம்பர் 23
சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் நினைவுநாள்
சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.
நீதிக்கதை
சுயநலம்
ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார்.
சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார்.
குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார்.
குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.
நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.
ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 40 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 30 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார்.
தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார்.
தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்.
இன்றைய செய்திகள் - 23.09.2025
⭐விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
⭐GST 2.0: ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கபடுகிறது.
⭐கடைக்காரர்கள், வர்த்தகர்கள் இந்திய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடி
⭐கைபர் பக்துன்க்வாவில் உள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தான் சரமாரி குண்டு வீச்சு: 30 பேர் உயிரிழப்பு
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டி காக்
🏀2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியா நடத்துகிறது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
Today's Headlines
⭐Chief Minister M.K. Stalin has announced 2,417 nursing vacancies to be filled soon.
⭐GST 2.0 Prices of Aavin milk products are being reduced.
⭐PM Modi said shopkeepers, traders should sell made in India products
⭐Pakistan shelling of a village in Khyber Pakhtunkhwa: 30 people were killed.
SPORTS NEWS
🏀South Africa's De Kock calls off retirement
🏀India to host 2036 Olympics: Union Minister Mansukh Mandaviya
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி