திருக்குறள்
குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
விளக்க உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்
பழமொழி :
A calm sea never made a skilled sailor.
அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்காது.
இரண்டொழுக்க பண்புகள் :
1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.
பொன்மொழி :
அறிவியலின் அடிப்படை கேள்வி கேட்கின்ற மனப்பான்மை தான் . கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும் - அப்துல் கலாம்
பொது அறிவு :
01.இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்கள் எந்த நாட்டின் மாதிரியை பின்பற்றி உருவாக்கப்பட்டது?
சோவியத் ரஷ்யா
Soviet Russia
02. உலக வளர்ச்சி அறிக்கையை
(World development Report) ஆண்டுதோறும் வெளியிடும் அமைப்பு எது?
உலக வங்கி- World Bank
English words :
Run across – find unexpectedly. எதிர்பாராத விதமாக யாரையாவது சந்திப்பது
Grammar Tips:
The words "there," "their," and "they're" are confusing because they are homophones (words that sound the same but have different meanings).
There:
Use "there" to indicate a place or a location.
Example: "We will meet you there".
Their:
Use "their" to show that something belongs to them.
They're is a contraction (a shortened form) of the words "they are".
Ex: "They're going to the library" (They are going to the library).
அறிவியல் களஞ்சியம் :
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதீத தொலைவில் உள்ள புதிய கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மூன்று கேலக்ஸிகளை இது படமெடுத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் துாண்டியுள்ளது.
நீதிக்கதை
நேரம் தவறாமை
சுனில், ஒரு பள்ளி பருவ மாணவன். ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்து, அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.
சுனில், அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசைப்பட்டு ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுனில் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுனில் தான் சாப்பிட்டு கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்திற்குப் போட்டான். காகம் வேகமாக ஓடி வந்தது.
வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுனில்க்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.
இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுனில் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான்.
காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுனில் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுனிலின் அருகில் வந்தது. சுனிலின் கையை ஆவலோடு பார்த்தது.
சுனில் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுனில் காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது.
சுனிலும் காகமும் நண்பர்களானார்கள். சுனில் சொல்வதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும். சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுனில் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாது, எழுதத் தெரியாது, ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது.
சுனில் வியந்தான். தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுனிலை அனைவரும் பாராட்டினார்கள்.
இன்றைய செய்திகள் - 04.09.2025
⭐இமயமலையில் விரிவடையும் பனிப்பாறை ஏரிகள் - திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
⭐நேபாளம்- பூடானில் இருந்து இந்தியாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
⭐நிலநடுக்கத்தால் பாதிப்பு: இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀US Open 2025 4ஆம் தரநிலை ஜோடியை வீழ்த்தி இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது யுகி பாம்ப்ரி ஜோடி
🏀சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Today's Headlines
⭐Glacier lakes expanding in the Himalayas pose a risk of flash floods
⭐Union Home Ministry announced that no passport is required to enter India from Nepal-Bhutan
⭐ 21 tonnes of relief supplies sent by India reach Afghanistan due to Earthquake damage.
SPORTS NEWS
🏀 US Open 2025 Yuki Bhambri pair advances to doubles quarterfinals by defeating 4th 4th-seeded pair.
🏀N. Srinivasan appointed as Chennai Super Kings Cricket Limited (CSKCL) chairman
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி