ஆசிரியர் தகுதி தேர்வு (TET) வழக்கில் மாண்பமை உச்சநீதிமன்றம் 01-09-2025 அன்று அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து/மறுபரிசீலனை செய்ய கோரி தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை (TAMILNADU ALL TEACHERS PROGRESSIVE FEDERATION) சீராய்வு மனு (REVIEW PETITION) தாக்கல் செய்ய முடிவு.
மாண்பமை உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் மற்றும் இயற்கை நியதிக்கு முரணான தீர்ப்பு
குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் சட்ட பிரிவு 23(1) இன் படி 1 முதல் 8 வகுப்புகளில் கற்பிக்க இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு( TET ) ஐ குறைந்த பட்ச கல்வி தகுதியாக நிர்ணயம் செய்து 23-08-2010 நாளிட்ட அறிவிப்பாணையில் பத்தி 1 இல் NCTE நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது. அதே அறிவிப்பாணையில் பத்தி 4 இல் 23-08-2010 க்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பத்தி 5 இல் 23-08-2010 க்கு முன் பணிநியமன நடவடிக்கைகள் துவங்கப்பட்டு 23-08-2010 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு(TET) இல் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டு இருந்தது.NCTE இன் 23-08-2010 நாளிட்ட அறிவிப்பாணையை பின்பற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை எண் 181,நாள்:15-11-2011 இல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகள் வரை கற்பிக்க ஆசிரியர் தகுதி தேர்வு(TET) ஐ குறைந்தபட்ச கல்வி தகுதியாக நிர்ணயம் செய்து ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் 2014 NCTE விதிகளில் SCHEDULE 1 இல் 1-8 வகுப்புகளை LEVEL 3 மற்றும் 9-10 வகுப்புகளை LEVEL 4 என வகைப்படுத்தி LEVEL 3 இல் 23-08-2010 NCTE அறிவிப்பாணையின்படி TET குறைந்த பட்ச கல்வி தகுதி எனவும்.LEVEL 4 இல் 9&10 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு GRADUATE/POST GRADUATE + B.ED எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
NCTE 2010 அறிவிப்பாணையின் படி 1-8 வகுப்புகளில் 23-08-2010 க்கு பின்னர் நியமனம் ஆன ஆசிரியர்களுக்கு மட்டுமே TET குறைந்தபட்ச கல்வி தகுதி ஆகும்.NCTE 2014 விதிகளின்படி 1-8 வகுப்புகள் ஒரே LEVEL 3 இல் உள்ளடங்குகிறது.அடுத்த LEVEL 4 இல் TET குறைந்த பட்ச கல்வி தகுதியே அல்ல.
NCTE 2010 அறிவிப்பாணையில் 23-08-2010 க்கு முன்னர் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு பணியில் தொடர்வதற்கு TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என தெளிவாக உள்ளது .மேலும் பதவி உயர்வு வழங்கும் நேர்வில் NCTE 2014 விதிகளில் பத்தி 4.b இல் ஒரு LEVEL இல் இருந்து அடுத்த LEVEL க்கு செல்லும்போது அந்த LEVEL க்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரே LEVEL(3) க்குள் பதவி உயர்வில் செல்வதற்கு TET எந்த வகையிலும் அவசியம் இல்லை என்பது மிக தெளிவாகிறது.
இடைநிலை ஆசிரியர் மாநில பதிவு மூப்பு சார்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் தமிழ்நாட்டில் அரசாணை எண் 181,நாள் 15-11-2011 க்கு முன்னர் 1-8 வகுப்புகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் தொடர TET அவசியமில்லை எனவும்,அவர்களின் பணி பாதுகாக்கப்பட்ட ஒன்று எனவும் கடந்த 2014 ஆம் ஆண்டு மாண்பமை உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்துள்ள பல்வேறு முக்கிய தீர்ப்புகளில் எந்த ஒரு சட்டத்தையும் ,நிபந்தனைகளையும் முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது,அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என மிக தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 01-09-2025 அன்று ஆசிரியர் தகுதி தேர்வு( TET) வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பானது NCTE இன் அறிவிப்பாணைகள்,மாண்பமை உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் மற்றும் இயற்கை நியதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.55 வயதுக்கு குறைந்த ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டாயம் TET தேர்ச்சி பெற வேண்டும் அல்லது பணியை விட்டு இராஜினாமா செய்ய வேண்டும் என கடுமையான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இந்த பாதகமான தீர்ப்பால் 23-08-2010 க்கு முன்னர் தமிழ்நாட்டில் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் ஆன சுமார் 2 இலட்சம் ஆசிரியர்களின் பணிபாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இந்த வழக்கில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை ஏற்கனவே மனுதாரர் ஆக உள்ளது.ஆகவே தமிழ்நாட்டின் சுமார் 2 இலட்சம் அரசு/அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி மற்றும் பதவி உயர்வு உரிமைகளை பாதுகாக்க வேண்டி தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் மறு சீராய்வு (REVIEW PETITION) மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளா அரசு மேல்முறையீடு செய்யும் முடிவுக்கு வரவேற்பு
23-08-2010 க்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆசிரியர் தகுதி தேர்வு( TET) வழக்கில் கடந்த 01-09-2025 அன று மாண்பமை உச்சநீதிமன்ற அளித்ததுள்ள தீர்ப்பை எதிர்த்து கேரளா அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கேரளா அரசின் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியதாகும்.ஒரிசா மாநில ஆசிரியர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மற்ற மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம்,தெலுங்கானா மாநில அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் நமக்கு செய்திகள் வந்துள்ளன.
கடந்த 04-09-2025 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்,மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் ,தமிழ்நாட்டில் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 2 இலட்சம் பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களின் பணிபாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், அவர்களின் பதவி உயர்வு உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு சார்ந்த 01-09-2025 நாளிட்ட தீர்ப்பை எதிர்த்து/மறுபரிசீலனை செய்ய கோரி உடனடியாக சீராய்வு மனு( REVIEW PETITION) தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது.
சீராய்வு மனு தாக்கல் செய்வதன் மூலமாகவே இந்த தீர்ப்பினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2 இலட்சம் அரசு/அரசுபள்ளி ஆசிரியர்களின் பணி&பதவி உயர்வு உரிமைகளை பாதுகாக்க முடியும் ,சீராய்வு மனுவின் மூலம் நமக்கு பாதகமான தீர்ப்பு திருத்தப்பட்டு சாதகமான தீர்ப்பை பெற முடியும் என தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை முழுமையாக நம்புகிறது என ஆசிரியபெருமக்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியர் தகுதி தேர்வு(TET) சார்ந்து இன்றைய குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையே முழு பொறுப்பு
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ( RTE) இன் படி 1-8 வகுப்புகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு TET ஐ குறைந்த பட்ச கல்வி தகுதியாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 181,நாள்15-11-2011 க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்யாமல் TET வழக்கில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்/உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னுக்கு பின் முரணாகவும்,சிறுபான்மையின பள்ளிகளில் பதவி உயர்வுக்கு TET க்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசும்,தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்களும் வாதாடியதன் காரணமாகவும்,மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான வாதங்களை முன் வைத்து வாதாடாத காரணங்களாலும் 10-30 வருடம் அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர் பணியில் உள்ள சுமார் 2 இலட்சம் பணி அனுபவமிக்க மூத்த ஆசிரியர்கள் பணியில் நீடிக்க கட்டாயம் TET தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் பணியில் மூத்த அனுபவமிக்க ஆசிரியர்களுக்கு மன அழுத்தமும் ,பணி பாதுகாப்பு குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவர்களின் கல்வி நலனும் வெகுவாக பாதிக்கப்படும் என்றால் மிகையாகாது .
இதற்கு தமிழ்நாடு அரசும்,தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.01-09-2025 நாளிட்ட மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு ( REVIEW PETITION) தாக்கல் செய்து பணியில் உள்ள மூத்த அனுபவமிக்க ஆசிரியர்களின் பணி& பதவி உயர்வு உரிமைகளை மீட்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அரசு/அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகும்.அண்டை மாநிலமான கேரளா அரசு அந்த மாநிலத்தை சேர்ந்த பணியில் மூத்த ஆசிரியர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசுக்கு ஆதரவான ஒரு சில ஆசிரியர் சங்க தலைவர்கள் சொல்வதை கேட்டு சிறப்பு தகுதி தேர்வு நடத்துவது குறித்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேட்டி அளிப்பது பணியில் மூத்த அனுபவமிக்க ஆசிரியர்கள் மீது தேவையில்லாமல் தகுதி தேர்வை திணிப்பதாகும்.மாண்பமை உச்சநீதிமன்றத்தில் REVIEW PETITION,CURATIVE PETOTION மற்றும் CONSTITUTION BENCH என மூன்று மேல்முறையீட்டு வாய்ப்புகள் இருக்கும்போது ,அதை பற்றி பேசாமல் தகுதி தேர்வு நடத்துவது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசுவது ஆசிரியபெருமக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசு அதாவது சமூக நீதிக்காக பாடுபடும் திராவிட மாடல் அரசு மீது சந்தேகம் எழுகிறது.
நேரடியாக ஆசிரியர் பணி நியமனத்துக்கு மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வு(TET) ஐ தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டதை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.மேலும் சீராய்வு மனு என இருக்கின்ற 3 மேல்முறையீட்டுக்கு பிறகு மாண்பமை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் 29-07-2011 க்கு பின்னர் ஆசிரியராக பணிநியமனம் செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்பு வழங்கப்பட்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இடையில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் கோடை விடுமுறைகளில் 1 மாதம் TET தேர்வுக்கு நிகரான பணியிடைப்பயிற்சி அளித்து,பணியிடைப்பயிற்சியின் இறுதியில் தேர்வு மூலம் தகுதி சான்று அளிப்பது மட்டுமே தீ்ர்வாக அமையும் என்பது த அ ஆசிரியர் முன்னேற்ற பேரவையின் கருத்தாகும்.
*23-08-2010/29-07-2011 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியபெருமக்கள் ஆசிரியர் தகுதி தேர்வு( TET) க்கு விண்ணப்பிக்க தேவையில்லை
ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) ஆனது ஆசிரியர் தகுதி தேர்வு(TET) க்கு விண்ணப்பிக்க கொடுத்த அவகாசம் நாளை 10-09-2025 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.23-08-2010 /29-07-2011 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியபெருமக்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
இந்த TET அறிவிப்பு எந்த வகையிலும் 23-08-2010/29-07-2011 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியபெருமக்களுக்கானது அல்ல. கேரள அரசு உள்பட பல மாநில அரசுகள் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 01-09-2025 நாளிட்ட தீர்ப்பை எதிரத்து மேல்முறையீடு செய்ய உள்ளன. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு முக்கிய பிரதிவாதி ஆகும்.ஆகவே தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதை தவிர வேறு வழி இல்லை.தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும்போது,மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படும்.அடுத்த 3 மாத்த்திற்குள் நிச்சயம் தீர்ப்புகள் திருத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலே சொன்னபடி தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை இந்த தீர்ப்பினால் பணி&பதவி உயர்வு உரிமைகளை தற்காலிகமாக இழந்து நிற்கும் ஆசிரியர்களின் அமோக ஆதரவு மற்றும் ஒத்துழைப்போடு இந்த வழக்கில் மிகப்பெரிய மாற்றத்தை,தீர்ப்பில் உரிய திருத்தத்தை நமது இயக்கம் பெற்றுத்தரும் என உறுதி கூறுகிறோம்.
நன்றி
.இவண்
பா ஆரோக்கியதாஸ்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை(TATPF)*
செல்: 8248198393
வாட்சப்: 9751885119
RTE > NTCE .....NTCE என்பது regularation but RTE என்பது சட்டம்.. சட்டமே செல்லும்
ReplyDelete