RTE சட்டம் 2009 பிரிவு -23 புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கிறது அதே நேரம் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
2010 - ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் ( NCTE அறிவிப்பிலும் , குறிப்பிட்ட தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு பொருந்தாது எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
TET தேர்வை பின்னோக்கிப் பயன்படுத்துவது ஆசிரியர்களின் உரிமைகளைப் பறித்து தேவையற்ற சிக்கலையும் கற்பித்தலில் நிலையற்றதன்மையையும் உருவாக்கும்.
TET paper 2 social online test
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2025/09/tntet-paper2.html
தமிழக அரசு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநில அரசுகளுமே மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றன. ஆனால் பொதுவாக உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவினை ஏற்பது இல்லை.. அப்படியே ஏற்றாலும், கல்வித் தரம் என்பது பொதுநலனுடன் தொடர்புடையது ஆகும். எனவே உச்ச நீதிமன்றம் முன்னுரிமை அளிக்கும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு உரிமையை விட, குழந்தைகளின் தரமான கல்வி உரிமைக்கு நீதிமன்றம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் நிலைமை சிக்கலாகும்.
ReplyDeleteமிகவும் சிக்கலான நிலை
அதேபோல் மறு சீராய்வு மனுவினை பொறுத்தவரை தீர்ப்பில் மிகத் தெளிவான சட்டப் பிழை அல்லது புதிய, வலுவான சான்றுகள் இருந்தால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வழக்கில், RTE சட்டம் தெளிவாக இருப்பதால், சட்டப் பிழைக்கான வாய்ப்பு குறைவு.
நிதி உதவி நடுநிலை பள்ளிகள் 1-8 வகுப்பு பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளாகும் பொதுவாக நடுநிலை பள்ளிகள் கிராம புரங்களில் செயல் படுகிறது. இதில் ஏழை பிள்ளைகளே படிக்கிறார்கள். இந்த அரசு நிதி உதவி நடுநிலப் பள்ளிகள் அனைத்தும் 1974 தமிழ்நாநாடு தனியார் பள்ளிகளாக வே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் சார்ந்த உச்ச நீதி மன்றமும் இந்த 1-8 RTE சட்டப்படி படிக்கும் மாணவர்களை குறிப்பிட்டே TET தேர்வு கட்டாயம், ஆனால், இந்த 1-8 கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு 7.5 இட ஒதுக்கீட்டில் இடமில்லை அதாவது, நிதி உதவி நடுநிலை பள்ளிகளில் 1-8 வகுப்புகள் படித்து பிறகு 9-12 வகுப்புகள் அரசு பள்ளிகளில் படித்தால் சட்டப்படி 7.5 தகுதி பெறுகிறார்கள் இவர்களை ஒதுக்கி விட்டு தனியார் மெட்ரிவுலேஷன் CBSE பள்ளிகளில் RTE ஒதுக்கீட்டில் 1-8 வகுப்பு படித்து பிறகு அரசு பள்ளிகளில் 9-12 படித்தால் 7.5 இடம் உண்டு இந்த பிள்ளைகளுக்கு இடம் உண்டு ஆனால்,ஆனால் முழுமையான கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 1-8 வகுப்புகள் படித்து 9-12 வகுப்புகள் அரசு பள்ளியில் படித்த ஏழை பிள்ளைக்கு 7.5 இடம் இல்லை. ஒருவரும்இந்த ஏழை பிள்ளைகளை நினைக்கவே இல்லை. உச்ச நீதி மன்றம் இந்த பிள்ளைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை TET படிக்க சொல்கிறது ஏழை பிள்ளைகள் ஏற்கனவே சட்டம் வழங்கிய நீதியை யே பெற முடியவில்லை. TET வந்து என்ன மாற்றம் அவர்களுக்கு கிடைத்து விடும்?? முதலில் இப்பொழுது உள்ள உரிமையை கொடுங்கள்
ReplyDelete